தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செ.ய்.யலாம்?!

மனிதருடைய தோற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது தலைமுடிதான். தலையில் போதுமான முடி இல்லை என்றாலோ, முடிகள் அனைத்தும் கொட்டி சொட்டையாக இருந்தாலும் அதை அவமானமாக பலரும் கருதுகிறார்கள். குறிப்பாக இப்போதெல்லாம் நூற்றில் 10 ஆண்களுக்கு முடிகள் கொட்டி விடுகிறது. 30 வயதுக்கு கீழே உள்ள பலருக்கும் கூட முடிகள் கொட்டி விடுகிறது. அதேபோல், பெண்களுக்கும் முடி கொட்டுதல் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

ஆண்கள் பலரும் விக் அல்லது செயற்கையாக முடி நடும் சிகிச்சை செய்து கொள்கிறார்கள். சில நேரங்களில் அது ஆபத்தையும் ஏற்படுத்துவதுண்டு. எனவே தலை முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்..

தலை முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர புரதம் மற்றும் வைட்டமின் டி உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக வெந்தயம் மற்றும் கடுக்காய் கலந்த இயற்கையான முறைகளை பின்பற்றுவது நமக்கு நல்ல பலனை தரும்.

அதாவது வெந்தயத்தை இரவில் ஊற வைத்து அதை காலையில் அரைத்து தலையில் ஹேர் பேக் போல போட்டு குளிக்கும் போது முடி நன்றாக செழித்து வளரும்
. அதேபோல் செம்பருத்தி பூ, நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் எல்லாவற்றையும் சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவி வரலாம்.

அதேபோல் முட்டை, பால், சீஸ் மற்றும் காளான் போன்ற விட்டமின் டி நிறைந்த உணவுகளும் முடி வளர உதவும். பாதாம் போன்ற பருப்பு வகைகளும், வெண்ணையும் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். அதேநேரம் முடி உதிர்வு அதிகமாக இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *