விட்டுருங்க, சொந்த ஊருக்கே போறேன்..” மருத்துவர்களிடம் சொன்ன வட மாநில இளைஞர்

தலைசீவும் சீப்பை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்..!
தினமும் நாம் பயன்படுத்தும் சீப்பை முறையாக சுத்தம் செய்யாவிட்டால், அதுவே பல கூந்தல் மற்றும் உச்சந்தலை பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

நாம் தலை சீவும்போது முடியிலுள்ள எண்ணெய், அழுக்கு, இறந்த செல்கள் மற்றும் பொடுகு போன்றவை சீப்பின் பற்களில் படிந்துவிடுகின்றன. நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாத சீப்பில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை காளான்கள் எளிதாக தொற்றி கொள்ளும்.

அசுத்தமான சீப்பை பயன்படுத்துவதால் ஏற்படும் முதல் பெரிய பாதிப்பு பொடுகு. சீப்பில் தங்கியிருக்கும் பூஞ்சை மீண்டும் உச்சந்தலைக்கு சென்று பொடுகை அதிகப்படுத்தும். இதனால் தலை அரிப்பு மற்றும் செதில் செதிலாகத் தோல் உதிர்தல் ஏற்படும்.

எனவே, குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது சீப்பை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊறவைத்து சுத்தம் செய்வது அவசியம். சுத்தமான சீப்பைப் பயன்படுத்துவது கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உச்சந்தலையை தொற்று நோய்களிடமிருந்து பாதுகாக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *