யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியும் தேசிய மக்கள் சக்தியின் முழுநேர உறுப்பினரும் கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(NPP) சார்பாக போட்டியிட்டவருமான யான்சிகா தனது உயிரை மாய்த்துள்ளார். இவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தொடர்பாக பொலிசார் விசாரணைளை மேற்கொண்டுள்ளார்கள். இவரது இறப்புத் தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் , தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இவர் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் இந்நிலையில் நேற்று (11) தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாகவும் மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
