16 வருடமாக 3 பிள்ளைகளை தேடும் கிளிநொச்சி தாய்!!

தனது மூன்று பிள்ளைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 16 வருட காலமாக அவர்களை தேடி வருவதாக கிளிநொச்சி தாயார் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாயார் ஒருவரே அவ்வாறு தெரிவித்தார்.

ஆணைக்குழுக்களுக்கு சென்றும் எந்த தகவல்களும் இல்லை
கிளிநொச்சி கண்டாவளை பகுதியை சேர்ந்த வைரமுத்து நிரஞ்சனாதேவி என்பவரின் மகன்களான , வைரமுத்து வைகுந்தன் 2009ஆம் ஆண்டு 02ஆம் மாதம் 11ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மகனான வைரமுத்து லோகிதன் 2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் 22ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரது மகளான வைரமுத்து பிரதாயினி 2009ஆம் ஆண்டு 05ஆம் மாதம் 12ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

07 பிள்ளைகளில் மூன்று பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் , கணவர் மற்றும் ஏனைய நான்கு பிள்ளைகளுடன் கண்டவளையில் வாழ்த்து வருகின்றார்.

அதில் ஒரு பிள்ளை விசேட தேவைக்குரிய பிள்ளையாக காணப்படுகிறார். காணாமல் ஆக்கப்பட்ட மூன்று பிள்ளைகளையும் தேடி ஆணைக்குழுக்களுக்கு சென்றும் எந்த விதமான தகவல்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட மூன்று பிள்ளைகளையும் தேடி ஆணைக்குழுக்களுக்கு சென்றும் எந்த விதமான தகவல்களும் இல்லை என்கிறார்.

தனது கணவரும் , வயது மூப்பு காரணமாக வேலைகளுக்கு செல்ல முடியாததால், வாழ்வாதாரம் இன்றி மிகுந்த சிரமங்களுக்கு மத்தியலையே எனது பிள்ளைகளை தேடி வருகிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *