பேருவளை பகுதியில் பொலிசாருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் கடும் மோ.தல்! OIC உட்பட 3 பொலிசார் படுகாயம்! வீடியோ

பேருவளை பகுதியில் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் கொடிகளை ஏற்றிக் கொண்டிருந்த ஒரு குழுவினருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

லொறி ஒன்றில் காணப்பட்ட குழுவினரிடம், வீதியைத் மறிக்க வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்தினர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது.

அந்தக் குழு அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது, இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *