புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வழி தவறி நிற்கும் இரு சிறுவர்கள்..?

காத்தான்குடி சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து இவர்கள் இருவரும் 3.30 மணிக்கு வெளியேறியுள்ளார்கள்.

கல்முனையில் இருக்கும் உறவை பார்க்க ஆசையில் இல்லத்திற்கு தெரியாமல் பேரூந்து ஒன்றில் ஏறி வந்துள்ளார்கள்.

கல்முனைக்கு போவதாக சொல்லி யிருக்கிறார்கள்.

ஆனால்…..

பேரூந்து மட்-புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் இறக்கியிருக்கிறது….

பயத்துடன் இரண்டு சிறுவர்களும் ஓடி வந்திருக்கிறார்கள் பொதுமக்கள் பிடித்து உணவு கொடுத்து பேஸ்புகில் பதிவு செய்தபின் பொலிஸ் மற்றும் சிறுவர் இல்ல ஆட்களும் வந்து சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது

யார் இந்த சிறுவர்களின் பெற்றோர்கள் ஏன் இன்னும் அவர்களால் தேடவில்லை என்ன நடந்தது இவர்களுக்கு இவர்களின் தாய் தந்தை யார் எங்கே அவர்கள்

எதோ ஒரு கதை அவர்களுக்குள்ள ஒட்டி இருக்கிறது
சமூகத்தில் வறுமை போதை பழக்கம் கணவன் மனைவி சண்டை பிரிவு தாய் தந்தை மரணம் இவற்றினால் பாதிக்கப்படுவது சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தைகள் சிறுவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *