நடிகை சினேகா புடவையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை சினேகா, 2000ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார்.

பின்பு தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு ஆனந்தம், உன்னை நினைத்து, வசீகரா, ஏப்ரல் மாதத்தில் என பல படங்களில் நடித்து அசத்தினார்.
நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் நடித்த போது அவரைக் காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆத்யாந்தா என்ற மகளும் உள்ளனர்.

அவ்வப்போது தனது குழந்தைகள் மற்றும் குடுபத்தினருடன் உள்ள புகைப்படத்தினை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது புடவையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
