வணக்கம் நண்பர்களே நீங்க தினமும் காலையில வெறும் வயித்துல ஒரு கப் சோம்பு தண்ணி குடிச்சா உங்க உடல்ல என்ன நடக்கும்னு தெரியுமா? நிறைய பேரு சோம்ப சாப்பிட்டு முடிச்சதுக்கு பின்ன வாயில வாசனை வராம இருக்க மட்டும்தான் சாப்பிடுவாங்க. ஆனா உண்மையிலேயே சோம்பு ஒரு அற்புதமான இயற்கை மருந்து. சோம்புல இருக்கிற இயற்கை பொருட்கள் செரிமனத்தை மேம்படுத்தும்.
உடல் எடையை குறைக்கிறதுக்கு உதவும். வயிற்று வீக்கத்தை குறைக்கும். உடல்ல இருக்கிற நச்சுக்களை வெளியேத்துவதுக்கு உதவும். அதுவும் தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சா இன்னும் அதிகமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். ஆனா இங்கதான் ஒரு முக்கியமான கேள்வி வரும். சோம்பு தண்ணீரை எப்படி குடிக்கணும் எவ்வளவு அளவு குடிக்கணும் யாரெல்லாம் குடிக்க கூடாது? தினமும் சோம்பு தண்ணி குடிச்சா கிடைக்கிற 10 அற்புதமான நன்மைகளை பத்தி தெளிவா தெரிஞ்சுக்க போறோம்.
இந்த வீடியோவை ஃபுல்லா பாத்தீங்கன்னா நாளையில இருந்து நீங்களும் சோம்பு தண்ணி குடிக்க கண்டிப்பா ஆரம்பிச்சிருவீங்க. வாங்க வீடியோக்குள்ள போகலாம். ஃபர்ஸ்ட் சோம்பு தண்ணினா என்னன்னு பார்ப்போம். சோம்பை இங்கிலீஷ்ல பெனல் சீட்ஸ்ன்னு சொல்லுவாங்க. இதுல விட்டமின் சி, கால்சியம், அயன், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் எல்லாமே அதிகமா இருக்கு.
இந்த சத்துக்கள் உடம்புக்கு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். சோம்பை தண்ணில ஊற வச்சு இல்லைன்னா கொதிக்க வச்சு குடிச்சா அதோட சத்துக்கள் எல்லாம் தண்ணில கலந்து உடம்புக்கு நல்ல பலன்களை கொடுக்கும். சோம்பு தண்ணீரோட முக்கியமான நன்மை செரிமானத்தை மேம்படுத்துறது. சோம்புல இருக்கிற நேச்சுரல் எண்ணெய், வயிற்று எரிச்சல், கேஸ், ப்ளோட்டிங் போன்ற பிரச்சனைகளை எல்லாம் குறைக்கிறதுக்கு உதவும்.
அதனாலதான் நிறைய ஹோட்டல்கள்ல சாப்பிட்டு முடிச்சதுக்கு பின்ன சோம்பு வந்து சாப்பிட கொடுப்பாங்க. பாடி வெயிட்ட குறைக்க ட்ரை பண்றவங்களுக்கு சோம்பு தண்ணீர் குடிக்கிறது ரொம்பவே உதவியா இருக்கும். சோம்பு மெட்டபாலிசத்தை அதிகரிக்கறதுக்கு உதவும். அதிகமா பசி வரத தடுக்கும். இதனால கலோரி சாப்பிடுறது குறைஞ்சு வெயிட் லாஸுக்கு உதவும். நிறைய பேருக்கு சாப்பிட்டதுக்கு பின்ன வயிற்று வீக்கம் வரும்.
இதுக்கு கேஸ் ப்ராப்ளமும் டைஜெஷன் ப்ராப்ளம் தான் காரணம். சோம்பு தண்ணீர் குடிச்சா கேஸ் குறையும். வயிறு சீரா இருக்கும். சோம்பு தண்ணீர் ஒரு நல்ல டீடாக்ஸ் டிரிங்க். இது உடல்ல [தொண்டையைச் சரிசெய்தல்] இருக்கிற தேவையில்லாத கழிவுகளை வெளியேத்துவதுக்கு உதவும். இதனால உடம்பு ரொம்ப லேசா இருக்கும். சோம்புல ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு.
இதனால ஸ்கின் க்ளோ அதிகமாகும். முகப்பரு குறையும். ஸ்கின் ஹெல்த் மேம்படும். சோம்புல பொட்டாசியம் வந்து அதிகமா இருக்கு. பொட்டாசியம் பிளட் பிரஷரை பேலன்ஸ் பண்ண உதவும். அதனால சோம்பு தண்ணீர் குடிக்கிறது இதய ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. நிறைய பேருக்கு பேட் பிரீத் பிரச்சனை இருக்கும். சோம்பு தண்ணீர் வந்து பாக்டீரியாவை குறைக்கிறதுக்கு உதவும்.
மவுத்துக்கு பிரெஷ்னஸ் கொடுக்கும். சோம்பு தண்ணீர் குடிக்கிறது பெண்களுக்கு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். இது ஹார்மோனல் பேலன்ஸ் பீரியட் பெயின் குறைக்கிறதுக்கு உதவியா இருக்கும். சோம்புல விட்டமின் சி அதிகமா இருக்கு. இதனால இம்யூனிட்டி அதிகரிக்கும். இன்பெக்ஷன் வர வாய்ப்பு குறையும். சோம்புல இருக்கற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், விட்டமின்ஸ் கண்களோட ஆரோக்கியத்துக்கு உதவி பண்ணும்.
சோம்பு தண்ணீரை எப்படி ரெடி பண்றதுன்னு பார்ப்போம். சோம்பு தண்ணீர் ரெடி பண்றது ரொம்பவே ஈஸி. சோம்பு தண்ணீரை ரெண்டு மெத்தட்ல ரெடி பண்ணலாம்.ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் மெத்தட் ஒரு கப் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் சோம்ப நைட் ஃபுல்லா ஊற வச்சு காலையில வடிகட்டிட்டு குடிக்கலாம். செகண்ட் மெத்தட் பாத்தோம்னா ஒரு கப் தண்ணில ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து அஞ்சு நிமிஷம் கொதிக்க வச்சு வடிகட்டிட்டு குடிக்கலாம்.
இந்த சோம்பு தண்ணீரை எப்ப குடிக்கணும்னு பார்ப்போம். காலையில வெறும் வயித்துல குடிக்கலாம். இல்லன்னா சாப்பிட்டு முடிச்சதுக்கு பின்ன குடிக்கலாம். யாரெல்லாம் கவனமா இருக்கணும்னு பார்ப்போம். சோம்பு தண்ணீர் பொதுவாவே எல்லாருக்குமே சேப் தான். ஆனா அலர்ஜி உள்ளவங்க கர்ப்பிணி பெண்கள் டாக்டர் அட்வைஸ்க்கு பின்ன குடிக்கிறது நல்லது.
மொத்தத்துல பார்த்தா சோம்பு தண்ணீர் ஒரு எளிய இயற்கையான ஆரோக்கிய பானம் தான். தினமும் ஒரு கப் சோம்பு தண்ணீர் குடிச்சா செரிமானம் மேம்படும். பாடி வெயிட் கட்டுப்படும். இம்யூனிட்டி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அதனால நாளையிலிருந்து உங்களோட டெய்லி லைப்ல சோம்பு தண்ணீர் குடிக்க ட்ரை பண்ணுங்க. இந்த வீடியோ கண்டிப்பா உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும்.
இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க. அடுத்த ஹெல்த் டிப்ஸ்காக நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ண மறக்காதீங்க. தேங்க்யூ.
