டிசம்பர் 15, 2025 காலையில 9 மணிக்கு ஒரு தெருவுல உள்ள டிரைனேஜ் பக்கத்துல ஒரு குரூப் ஆஃப் திருநாய்கள் என்னத்தையோ போட்டு கடிச்சு இழுத்துக்கிட்டு இருக்கு. அங்க உள்ள மக்களுக்கு அது என்னனே தெரியல. சரி கிட்ட போய் பார்கலாம்ன்னு கொஞ்சம் நெருக்கமா போக ட்ரை பண்றாங்க. அப்ப அவங்களால கிட்டயே போக முடியலன்னா அந்த அளவு அழுகுன நாத்தம் அடிச்சிருக்கு.
அப்படியுமே ஒரு சில இளைஞர்கள் அதை போய் என்னன்னு எட்டி பார்த்துருக்காங்க. அவங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. ஏன்னா அது ஒரு மனித உடம்பு. கைகள் இல்ல கால்கள் இல்ல தலை இல்ல அந்த உடம்பு பகுதியை அந்த நாலஞ்சு நாய்கள் போட்டு கடிச்சு கொதறிட்டு இருந்திருக்கு. அது மட்டும் இல்லாம அந்த உடல் முழுசாவே அழுகுன நிலையில இருந்திருக்கு.
உடனே அங்க உள்ள லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கிறாங்க. போலீசும் பாரன்ஸ்டிக் டீமோட அந்த இடத்துக்கு வராங்க. வந்த உடனே அந்த ஒரு சடலத்தை கைப்பற்றுறாங்க. கைப்பற்றிட்டு அவங்களால சுத்தமா ஐடென்டிஃபையே பண்ண முடியாது. ஏன்னா தலையும் இல்லை கையும் இல்ல காலும் இல்லையா? சரின்னு என்ன செய்றாங்க அப்படின்னா, ஒரு அஞ்சு நாள் மார்ச்சரில வைக்கலாம் அப்படின்னு மார்ச்சரில வைக்கறாங்க.
சோ பாத்தா யாருமே வந்து அடையாளம் காண வரவே இல்லை சரி என்ன செய்றாங்க அப்படின்னா கரெக்டா டிசம்பர் 20 அந்த ஒரு பாடிய போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்புறாங்க. அப்ப போலீஸ்க்கு ஒரு முக்கிய தகவல் கிடைக்குது. ஏன்னா அந்த பாடியோட லெஃப்ட் ஹேண்ட் ஷோல்டர்ல ராகுல் அப்படின்னு ஒரு பச்சை குத்தி இருக்கு. சரின்னு இந்த ஒரு க்ளூவ வச்சு போலீஸ் என்ன செய்றாங்க அப்படின்னா அந்த ஒரு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்லயே எதுனா கம்ப்ளைன்ட் ரெக்கார்ட்ஸ் ஃபைல் ஆயிருக்கா? கடந்த ஒரு வாரத்திலயோ இல்ல ரெண்டு வாரத்திலயோ ராகுல் அப்படின்றவங்க எதுனா மிஸ்ஸிங் கம்ப்ளைன்ட்ஸ் இருக்கா அப்படின்னு செக்
பண்றாங்க. அப்பதான் ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்னு கிடைக்குது. கரெக்டா நவம்பர் 24ஆம் தேதி ரூபி அப்படின்ற ஒரு பெண் ஒரு மிஸ்ஸிங் கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ணிருக்காங்க. தன்னோட கணவரான ராகுலை காணும் அப்படின்னட்டு. உடனே போலீஸ் இது ரெண்டையும் மேட்ச் பண்ணி பார்த்து அந்த ரூபிய அந்த ஒரு சடலத்தை பா்கறதுக்காக அழைச்சிட்டு வராங்க.
அழைச்சிட்டு வந்து பாக்குறப்பே ரூபி என்ன சொல்றாங்க அப்படின்னா, ஒரு ரெண்டு மூணு செகண்ட் கூட அந்த சடலத்தை பார்கலையா பார்த்த உடனே இது என் கணவர் இல்ல அப்படின்ற மாதிரி சொல்றாங்க. ஏம்மா நீதாமா ராகுல்ன்ற கம்ப்ளைன்ட் பண்ணி இருக்க. கொஞ்சம் செக் பண்ணி பாருமா நல்லா செக் பண்ணி சொல்லு அப்படின்ற மாதிரி போலீஸ் சொல்லிருக்காங்க. அப்படியுமே இவ ஒரு மாதிரி போலீஸ்ட்ட எதிர்த்து பேச ஆரம்பிச்சிருக்கா அதாவது ரொம்ப கான்பிடென்ட்டா பேசிருக்கா என்ன சொல்லிருக்கா அப்படின்னா ஏங்க என் கணவர பத்தி எனக்கு தெரியாதா? ஒரு தலை இல்லாத முண்டம் கை கால் இல்லாத முண்டத்தை காட்டி
என் கணவர்ன்னு ஏத்துக்க அப்படின்னு சொல்றீங்க எப்படி என்னால என் கணவர்ன்னு சொல்ல முடியும் அப்படின்ற மாதிரி ஒரு மாதிரி எதிர்த்து பேசி இருக்கா அப்பவே போலீஸ்க்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் எழும்பி இருக்கு. ஏன்டா நீ ஒரு கணவன் காணாம போயிட்டா நீ வந்து ஒரு சோகத்துல இருக்கணும். ஒரு துக்கத்துல இருக்கணும். அது எதுவுமே இல்லாம நீ என்ன கான்ஃபிடென்டா போலீஸ் சண்டை போட்டுட்டு இருக்க அப்படின்னட்டு போலீஸ் அனலைஸ் பண்ணிட்டு இன்வெஸ்டிகேஷன்லாம் பண்ண ஆரம்பிக்கிறாங்க.
அப்பதான் ஒரு ஒரு அதிர்ச்சியான தர்ம சங்கடமான விஷயம் தெரிய வருது. இந்த ரூபி அப்படின்றவளுக்கும் இவளோட தம்பின்னு சொல்லிக்கிட்டு ஒருத்தன் அந்த கேரக்டர் அந்த வீட்ல இருப்பான். அவனுக்கும் உள்ள ஒரு கேவலமான விஷயமும் இதனால நடந்த கொலையை பத்திதான் இந்த கதையில நம்ம கேட்க போறோம். சோ உண்மையிலேயே சொல்றாங்க இரத்தம் உரைய வைக்கிற மாதிரி இருக்கும்.
ஏன்னா அந்த அளவு ப்ரீ பிளான்ட் மர்டர் ஒரு ஹாலிவுட் கிரைம் கதையே மிஞ்சிரும் அப்படின்னுதான் சொல்லணும். முழு கதைய பாக்குறதுக்கு மறக்காம வீடியோ முழுசா பாருங்க. அதுக்கு முன்னாடி ஒரு லைக் பண்ணிட்டு உங்களுக்கு கிரைம் கதைகள் கேட்க பிடிக்கும் அப்படின்ற பட்சத்துல நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க.
ஐயா இந்த கதையை சொல்றதுக்கு முன்னாடி இந்த குடும்பத்தை பத்தி சொல்லிடுறேன். இந்த குடும்பத்துல ரெண்டு பேர் ரூபி, ராகுல் இவங்க ரெண்டு பேருமே லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்காங்க. கிட்டத்தட்ட 15 வருஷம் ஆச்சு அவங்க கல்யாணம் பண்ணி இவங்களுக்கு ரெண்டு குழந்தைங்க. 10 வயசுல ஒரு பையனும், 12 வயசுல ஒரு பெண் குழந்தையும் இருக்காங்க. ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க.

இந்த ராகுல் இந்த கணவரை பத்தி சொல்லணும் அப்படின்னா, உண்மையிலேயே ரொம்ப கடின உழைப்பாளியும். அது மட்டும்ல்லாம ரொம்ப நேர்மையான ஆளும் கூட. இவர் என்ன செய்றாரு அப்படின்னா, ரூபியை கல்யாணம் பண்ணிட்டு, ரூபியோட சொந்த ஊருக்கே குடி போறாரு. அங்க போயிட்டு இவர் சேர்த்து வச்சிருந்த சேவிங்ஸ வச்சு ஒரு மிகப்பெரிய வீடு ஒன்னு கட்டுறாரு.
வீடு கட்டுனது மட்டும் இல்லாம நல்லபடியா அந்த குடும்பத்தையும் பார்த்துட்டு இருந்திருக்காரு. இந்த ராகுளோட தொழில் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா, இவர ஒரு கொத்தனார். அது மட்டும் இல்லாம, இந்த விலை உயர்ந்த ஷூஸ், செருப்பு இதையுமே இவரு தப்பாராம். சோ இதனால இவரோட வீட்டு மாடியல இவரோட வீடு இதெல்லாம் வச்சுக்கிட்டு இவரோட அந்தஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இந்த ஷூ தைக்கிற பிசினஸ்யும் இவரு சூப்பரா செஞ்சுிட்டு வராருன்னே சொல்லலாம்.
அந்த சைடு ரூபிய பத்தி பாத்தீங்கன்னா அப்படியே ஆப்போசிட்யா. எந்த அளவு இந்த ராகுல் அப்படின்ற புருஷன் நல்லவன் நேர்மையானவனோ இவ அதுக்கு எல்லாமே ஆப்போசிட். இவ எந்த மாதிரியான கேரக்டர் அப்படின்னா நிறைய இல்லீகல் ஆக்டிவிட்டீஸ், இன்ெத்திகல் ஆக்டிவிட்ீஸ் இந்த மாதிரியான ஆக்டிவிட்டீஸ்ல அதிகமா ஈடுபடுறவ. நான் எதை சொல்றேன் அப்படின்னா, இவ அந்த பிளாக்ல சரக்கு விக்கிறது, இந்த மாதிரி போதை பொருட்கள் விக்கிறது இந்த மாதிரில்லாம் செஞ்சிுட்டு இருப்பாங்களாம்.
இதைவிட ஒரு கேவலமான விஷயம் என்ன அப்படின்னா இவ வந்து அந்த ஒரு ஏரியால உள்ள ஆண்கள் மத்தியில மிகப்பெரியஃபேமஸ். அது மட்டும்ல்லாம இவ அந்த இடாகரா Facebook மூலியமா ஆண்களை ஏமாத்தி பணம் பறிக்கிற கும்பலோட இவ லிங்க் வச்சுக்கிட்டு அந்த மாதிரி செஞ்சுக்கிட்டு இருப்பாளாம். இன்னொரு முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா யாராவது ஒரு ஆண் இவள்ட்ட எதனா சண்டைக்கு போனாலோ எதனா சின்ன பிரச்சனை இருந்தாலோ, உடனே போலீஸ் ஸ்டேஷன்ல போயிட்டு அந்த ஆண் என்ன வந்து கெடுத்துட்டான் அப்படின்ற மாதிரி கம்ப்ளைன்ட் பண்ணி, அந்த கம்ப்ளைன்ட்ட வாப்பஸ் வாங்கணும் அப்படின்னா, எனக்கு ஒரு
மாதிரி காசு கொடு அப்படின்னு காசு மிரட்டி வாங்கிருவாங்களாம். இதனாலயே அந்த ஏரியால உள்ள மக்கள் இந்த குடும்பத்துல அந்த அளவு வச்சுக்க மாட்டாங்களாம். என்ன காரணம் அப்படின்னா இவன் எதுக்கு அடுத்தாலப்பா இந்த மாதிரி தவறுதலா கம்ப்ளைன்ட் கொடுத்துருவோம் அப்படின்னட்டு யாருமே இந்த குடும்பத்தை கண்டுக்கவே மாட்டாங்களாம் அங்க உள்ள ஏரியால உள்ள மக்கள்.
அதுக்கடுத்து இந்த ரூபிக்கு தம்பி ஒருத்தன் இருக்கான். அவனோட பேரு ஜுக்னு. அவன் எப்படியாப்பட்ட கேரக்டர் அப்படின்னா அந்த ஏரியாலயே ஒரு பயங்கரமான கொள்ளைக்காரன். அவன்ட்ட ஒரு 10 நிமிஷம் தனியா நின்னு பேசினாலே நம்ம போன் அடிச்சிட்டு போயிருவானாம். அந்த அளவு திருட்டு பையலா பாக்குற எல்லா பொருளையுமே திருடுவானா.
இதுல முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா திருடிட்டு எங்க கொண்டு வந்து கொடுப்பான் அப்படின்னா ரூபிட்ட தான் எடுத்துட்டு வந்து கொடுப்பானாம். அதுவும் அந்த ரூபி வீட்லயே தான் இருப்பானா அவன். போலீஸ் இவன அரெஸ்ட் பண்ண ரூபி வீட்டுக்கு வந்தாலும் கூட இந்த ரூபியானவ நேரா முன்னாடி வந்து நின்னுட்டு போலீஸ்ட்ட சண்டை போடுவாளாம். என் தம்பிய எல்லாம் அரெஸ்ட் பண்ண முடியாது உங்களால யார் நீங்க என் தம்பிய அரெஸ்ட் பண்ண உங்கள்ட்ட என்ன ஆதாரம் இருக்கு அப்படின்னட்டு போலீஸ்ட்டே ரொம்ப ரகல பண்ணுவாளாம் இந்த ரூபி.
இப்ப இந்த சம்பவங்கள்ல்லாம் நடந்துகிட்டு இருக்கப்ப அந்த தம்பி எங்க இருக்கான் அப்படின்னா ஜெயில்ல இருக்கான். சரி ரைட் இப்ப நம்ம கதைக்கு வருோம். அபிஷேக் அப்படின்ற ஒருத்தன் இருக்கான். இந்த அபிஷேக்கும் ரூபிக்கும் ஒரு சின்ன தொடர்பு ஏற்படுது. இது எப்படி அப்படின்னா இந்த ரூபியானவள பத்தி ஆல்ரெடி நான் சொல்லிட்டேன் கேவலமான பொய் கேஸ் போட்டு காசு சம்பாதிக்கிறவ.
இது வந்து அபிஷேக்குக்கு தெரிய வருது. இந்த அபிஷேக்குக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு அவனோட ஊர்ல. என்ன பிரச்சனை அப்படின்னா ஒரு நில தகராறு. இந்த நில தகராறுல அபிஷேக் என்ன செய்றான் அப்படின்னா அந்த ஆப்போசிட் பார்ட்டிய அசிங்கப்படுத்தி ஆகணும் அப்படின்றதுனால ரூபிய மீட் பண்றான். ரூபிய மீட் பண்ணி இந்த பாருமா எனக்கு இந்த மாதிரி நில பிரச்சனை போயட்டு இருக்கு.
அது நல்லபடியா முடியணும்னா அந்த என்னோட ஆப்போசிட் பார்ட்டிய அசிங்கப்பட்டு ஆகணும். அவனுக்கு மட்டும் அசிங்கம் வந்துருச்சுன்னா உனக்கு நான் ₹5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துறேன். அதனால உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய்யுமா அப்படின்ற மாதிரி ரூபிட்ட சொல்றான். அதனால ரூபி என்ன செய்றா அப்படின்னா ஒரு கேவலமான தப்பான கேஸ போடுறா அந்த ஆப்போசிட் பார்ட்டி மேல.
என்ன போடுறா அப்படின்னா என்ன இந்த மாதிரி கெடுத்துட்டாரு இவரு அப்படின்ற மாதிரி போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் போடுறா. இதனாலயே வந்து அந்த ஆப்போசிட் பார்ட்டி ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகுறாரு. சோ இந்த அபிஷேக் அப்படின்றவன் ரொம்ப நன்றி அப்படின்னு ரூபிக்கு ஒரு ஒ லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்குறான். இதுக்கப்புறம் அந்த அபிஷேக்கும் ரூபிக்கும் இடையில உள்ள பழக்கம் ஒரு தப்பான உறவா மாறுது.
அபிஷேக் அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போவானாம். அது மட்டும் இல்லாம முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா இந்த ரெண்டு குழந்தைகளும் ஒரு நாள் கேட்டுருக்க அந்த ரூபி என்ன தாயிட்ட. இவர் யாரு அடிக்கடி நம்ம வீட்டுக்கு வராங்களே அப்படின்னு அப்ப என்ன சொல்லிருக்கா அப்படின்னா இவர் வந்து மாமா உங்களுக்கு இவர் வந்து என்னோட தம்பி அப்படின்ற மாதிரி சொல்லி இருக்கா இந்த ரூபி.
இந்த கருமமான விஷயம் எதுவுமே கணவனான ராகுளுக்கு தெரியவே தெரியாதுங்க. இதுல இன்னொரு கேரக்டர் ஒருத்தன் வரான். அவனோட பேர்தான் கௌரவ். அந்த கௌரவ் யாருன்னு பாத்தீங்கன்னா அபிஷேகோட ரொம்ப கக்ளோஸ் பிரெண்ட். அபிஷேக் அந்த கௌரவ விட்ட இந்த மாதிரி ரூபின்றவன் என்னோட பிரெண்ட் ஒருத்த இருக்கா? இந்த மாதிரி நான் அவ கூட தப்பான ரிலேஷன்ஷிப்ல இருக்கேன் அப்படின்னு சொல்லி கௌரவை இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறான்.
இந்த ரூபிக்கு ஒரு மாதிரி கௌரவ மேலயும் ஆசை வந்துருச்சு. அங்க உள்ள மக்கள் இந்த ரூபியோட குடும்பத்தை சார்ந்தவங்க எல்லாம் இவன் யாரு அப்படின்ற மாதிரி கேக்குறப்ப இவன் என்னோட தம்பிதான் அப்படின்ற மாதிரி சொல்லி வைக்கிறான் இந்த கௌரவை. இந்த கௌரவம் அடிக்கடி வீட்டுக்கு வந்துகிட்டே இருக்காங்க. அதாவது அபிஷேக் நார்மலாதான் வந்து கௌரவை இன்ட்ரடியூஸ் பண்ணி வச்சான்.
ஆனா என்ன நடக்குது அப்படின்னா அந்த இடத்துல ரூபிக்கு அபிஷேக் விட கௌரவ ரொம்ப புடிச்சிருது. அதனால ரொம்ப அதிகமான டைம் ஸ்பெண்ட் பண்ண ஆரம்பிக்கிற அந்த கௌரவ கூட இது எதுவுமே அபிஷேக்கும் தெரியாதாம். எத்தனை அபேர் அப்படின்றத இந்த இடத்துல நீங்க நோட் பண்ணுங்க. அது மட்டும் இல்லாம தம்பி அப்படின்ற ஒரு விஷயத்தை வச்சு வெளி மக்கள் வெளிய ஊர்ல உள்ளவங்க எல்லாருக்குமே தம்பி தம்பி தம்பி வீட்டுக்கு வராரு.
தம்பி வெளிய போறாருன்னு அர்த்தம். ஆனா இவளுக்கு அது ஒரு கேவலமான ரிலேஷன்ஷிப். இவரு என்னன்னு சொல்லி பிள்ளைங்கள்ட்ட இன்ட்ரடியூஸ் பண்றா. இவர் வந்து உங்களோட சின்ன மாமா அப்படின்ற மாதிரி இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறா. ஐயா இவன் இந்த கேவலமான ரிலேஷன்ஷிப் வச்சிருக்கால அபிஷேக் கௌரவ கூட இந்த கௌரவக்கு இவ அபிஷேக் கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கா அப்படின்றது தெரியும்.
தெரிஞ்சாதான் இவன் வந்து இவ கூட இருக்கா. அபிஷேக்கே இது எதுவுமே தெரியாது. இருந்தாலும் இதை ஒரு மாதிரி பெர்ஃபெக்ட்டா மெயின்டென் பண்ணிருக்காங்க. யாருக்குமே தெரிஞ்சிட கூடாது இவனங்களுக்குள்ள அப்படின்றதுனால தனித்தனி செப்பரேட் டேஸ் இவங்களுக்கு ஷெட்யூல் மாதிரி வகுத்து அவங்கள அந்த டைம்ல வீட்டுக்கு கூப்பிடுறது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நடந்துகிட்டு இருக்கு.
இந்த சைடு ராகுல பார்த்தா குடும்பத்துக்காக உளைச்சு கொட்டிக்கிட்டு இருக்காருன்னே சொல்லலாம். ஒரு நாள் என்ன நடக்குது அப்படின்னா, அபிஷேக்கு தெரியாம கௌரவா வீட்டுக்கு வர சொல்லிடுறா. கௌரவும் இந்த ரூபியும் தனிமையில இருக்காங்க. தனிமையில இருந்துகிட்டு இருக்கப்பயே அபிஷேகம் வீட்டுக்கு வந்து அந்த விஷயத்தை பாத்துறான். பார்த்தஉடனே ரொம்ப அதிர்ச்சியாக அபிஷேக் அங்கேயே ரூபிய கண்ணா பின்னாடி திட்ட ஆரம்பிக்கிறான்.
திட்டுனது மட்டும் இல்லாம இனிமேல் உன் முகத்துலயே நான் முழிக்க மாட்டேன் அப்படின்னு அபிஷேக் இந்த ரூபிட்ட இருந்து கலண்டுகிட்டு அவனோட வாழ்க்கைய பார்க்க போயிட்டான். இப்பதாங்க சம்பவத்தோட கதைய ஆரம்பம். இப்ப ரூபி இந்த கௌரவ அப்படின்றவன் கூட ஒரு அபேர்ல இருக்கா இல்லையா? ஒரு நாள் என்ன நடக்குது அப்படின்னா ராகுல் ரூபிட்ட வந்து கேக்குறாரு.
இந்த மாதிரி நான் வந்து கொஞ்சம் வெளியில போகணும் நான் வர லேட் ஆகும்னு நினைக்கிறேன். ஏன்னா, என்னோட ஊர்ல இருக்க அத்த பொண்ணுக்கு கல்யாணம். சோ, அதனால நான் நிறைய விஷயங்களை நான்தான் முன்னெடுத்து பண்ணனும். அந்த கல்யாணத்துக்கு எனக்கு தேவையான பொருட்கள்ல்லாம் நான் வாங்க போறேன். சோ, வாங்கிட்டு டைம் இருந்தா அவங்களை போய் பார்த்துட்டு வந்துறேன்.
அதனால லேட் ஆகும் நான் வரதுக்கு. அப்படின்னு ஒரு மாதிரி மேலப் சொல்லிட்டு, ராகுல் வீட்ட விட்டு கிளம்ப ஆரம்பிக்கிறாரு. ரூபி என்ன நினைச்சிடுறா அப்படின்னா, சரி ஓகே நம்மளோட கணவன் ஏதோ கல்யாண வேலையா வெளிய போறாரு. எப்படியும் வரதுக்கு ஒரு ரெண்டு மூணு நாள் ஆகும் போல. அதனாலதான் லேட் ஆகும்ன்னு சொல்லிட்டு போறாரு அப்படின்னட்டு இந்த சைடு கௌரவுக்கு போன் அடிச்சு கூப்பிட ஆரம்பிக்கிறா.
கௌரவம் இந்த மாதிரி என்னோட புருஷன் வந்து வீட்ுல இல்ல ரெண்டு மூணு நாள் வெளிய போக போறாரு. நீ இங்கயே வந்து தங்கிரு அப்படின்ற மாதிரி போன் அடிச்சு கூப்பிட ஆரம்பிக்கிறா. கௌரவம் சரி ஓகே நான் வந்துறேன் அப்படின்னட்டு நைட் 11 மணிக்கு வரான். இதன் அடிப்படையில அந்த குழந்தைங்க இருக்கு இல்லையா இந்த ரூபி என்ன செய்றா அப்படின்னா அந்த வீட்லயே நான் சொன்ன தரைத்தளம் ஒன்னு இருக்கும் மேல்தளம் ஒன்னு இருக்கும்.
அந்த தரைத்தளத்திலயே ஒரு ஸ்டோரேஜ் ஏரியான்னு சின்ன ஏரியா இருக்கு. அந்த ரெண்டு பிள்ளைகளையும் தன்னோட அந்த ஆண் குழந்தையையும் பெண் குழந்தையும் என்ன சொல்றா அப்படின்னா நீங்க ரெண்டு பேரும் கீழ போய் ஸ்டோரேஜ் ரூம்ல படுத்துக்கங்க அப்படின்ற மாதிரி சொல்றா. அந்த குழந்தைகளுக்கு ஒண்ணுமே தெரியல. சரி அம்மா அப்படின்னு சொல்லிட்டு ஸ்டோரேஜ் ரூம்ல பாய் தலைவாணி எல்லாம் எடுத்துட்டு போய் படுக்க போயிருதுங்க.
கௌரவம் நைட் வந்துறான். இவங்க ரெண்டு பேரும் தனிமையில இருக்காங்க. என்ன நடக்குது அப்படின்னா போன ராகுல் என்ன யோசிச்சான்னு தெரியல. சரி ஓகே நம்ம பொருள் எல்லாம் வாங்கியாச்சு. இன்னொரு நாள் போய் செஞ்சுக்கலாம். நம்ம வீட்டுக்கே போலாம் அப்படின்னட்டு கரெக்டா நைட்ரடு மணிக்கு தன்னோட வீட்டுக்கு வரான். வந்த ராகுளுக்கு கதவு வெளியில பூட்டி இருக்கு.
நான் அடிச்சு அடிச்சு பாக்குறேன். யாருமே திறக்கல. சரின்னு பின்வாசல் வழியா போறான் ராகுல். பின்வாசல் வழியா உள்ள போன ராகுளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சிங்க. தவறான சிச்சுவேஷன்ல தன்னோட பொண்டாட்டியயும் அந்த கௌரவையும் பாத்துறான். பார்த்த புருஷனுக்கு ஒரே அதிர்ச்சி ராகுளுக்கு. அதாவது என்னடா இவ்வளோு கேவலமா இருக்கீங்க? தம்பின்னு சொன்னதுனாலதானடா உன்ன நான் வீட்டுக்குள்ளயே விட்டேன்.

நீ என்ன இவ்வளவு ஒரு கேவலமான விஷயத்தை என் பொண்டாட்டி கூட பண்ணிக்கிட்டு இருக்கேன்னு ரொம்ப கோவத்துல கத்த ஆரம்பிக்கிறான். கீழ உள்ள புழலுங்க எந்துருச்சுவாங்க அப்படின்னு ரூபி என்ன சொல்றா அமைதியா இரு, அமைதியா இரு. பேசிக்கலாம், பேசிக்கலாம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கான். இதுக்கு மேல என்னடி அமைதியா இருக்குது.
நானும் என் குழந்தைகளை அடைச்சிட்டு கிளம்பிடுறேன். உண்மையிலேயே உன் குள்ள அணிமேல நான் வாழ மாட்டேன் அப்படின்னு பேசிக்கிட்டு இருக்கான். ரொம்ப ஒரு மாதிரி ஆர்கியுமென்ட் நடந்துகிட்டே இருக்கு அந்த இடத்துல. ரூபி ஒரே ஒரு விஷயம் சொல்றாங்க அந்த கௌரவட்ட. இவனை எப்படியாவது கொன்னுரு வெளிய விட்டறாத அப்படின்ற ஒரு வார்த்தைய சொல்றா. கௌரவ் என்ன யோசிட்டான்னு தெரியல.
கீழ இருக்க ஒரு ராடு கம்பி எடுத்து மட்டுன்னு மண்டையில அடிக்கிறான் ராகுள் மண்டையில. ராகுல் அப்படியே நிலை கொலைஞ்சு போய் கீழ விழுவாரு. இருந்தாலும் ராகுளுக்கு உயிர் இருக்க எந்த அளவுக்கு பெரிய காயங்கள் ஆகல. மண்டை உடைஞ்சு இரத்தம்தான் ஊத்திக்கிட்டு இருக்கு. அந்த இரத்தத்தோட எந்திரிச்சு ரூபிய பார்த்து கேள்வி கேக்குறாரு. என்னமா உன்ன நான் எப்படியோ நினைச்சேன்.
நம்மளோட வாழ்க்கையை யோசிச்சு பாரு. நம்ம திருமணம் பண்ணி 15 வருஷம் ஆயிருச்சு. என்ன புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா அப்படின்ற மாதிரி ராகுல் அந்த ஒரு சோகத்துலயே கேக்குறான். அதாவது அடிச்சிட்டு விட்டுருவாங்க போல அப்படின்ற மாதிரி நினைச்சு பொண்டாட்டிட்ட பாசமா பேச ஆரம்பிக்கிறான். என்ன தெரியுமாங்க அவ பண்ணா அந்த ரூம்ல உள்ள சுத்தில எடுத்து அதுவும் அந்த சுத்தில வந்து ராகுள் அந்த ஷூ தப்பான்னு சொன்னேனே அதுக்கு பயன்படுத்துற சுத்தி.
அதை எடுத்து 58 தடவை ராகுள் மண்டையிலயே அடிச்சிருக்கா உயிர் போகுற வரை. அதுவும் நெஞ்சு மேலயே உட்கார்ந்து அடி அடின்னு அடிச்சிருக்கா 58 தடவை அடிச்சிருக்கா. ராகுளோட உயிர் அந்த இடத்திலயே போயிருது. இந்த விஷயம் எல்லாமே நைட்ரடு 2:30 மணிக்கு நடந்துகிட்டு இருக்கு. அடிச்சு கொன்னஉடனே முடிவு பண்றானுங்க. சரி நம்ம எப்படியாவது நாளைக்கு இந்த பாடிய எதுனா பண்ணி ஆகணும் இல்லன்னா நம்ம போலீஸ்ட்ட மாட்டிக்கலாம் அப்படின்னு யோசிச்சிட்டு நேரா ரெண்டு பேருமே கீழ இறங்கி போய் அந்த குழந்தைங்க தூங்குது இல்லையா ஸ்டோரேஜ் ரூம் அதுக்கு வாசல்லயே சேர போட்டு உக்காந்துறானுங்க.
குழந்தைகளும் காலைல 6:00 மணிக்குல்லாம் எந்திக்குது. அவசர அவசரமா குழந்தைங்கள அந்த ஸ்டோரேஜ் ரூம்லயே கிளப்பி விடுறாங்க. அப்பயே அந்த பிள்ளைங்க கேக்குது. ஏமா நம்ம ரூம்ல போய் கிளம்பலாம்ல்ல இங்க ஏமா கிளம்பிட்டு இருக்கோம் அப்படின்னட்டு. அதெல்லாம் இல்ல இன்னைக்கு இங்கதான் நீ கிளம்பணும் அப்படின்ற மாதிரி அந்த ரெண்டு பிள்ளைகளையுமே ஸ்டோரேஜ் ரூம்லயே ஃபுல்லா கிளப்பி விட்டு ஸ்கூல்ல கொண்டு போய் சீக்கிரமே விட்டுறானுங்க.
சீக்கிரமா விட்டுட்டு இவனுங்க ரெண்டு பேரும் பிளான் போடுறாங்க. அதாவது நான் ஒரு சில பொருள் எல்லாம் சொல்றேன் அதெல்லாம் வாங்கிட்டு வந்துரு அப்படின்னு இந்த ரூபி சொல்றா. என்னென்ன பொருள் அப்படின்னா ஃபர்ஸ்ட் அந்த டெல் கட்டர் மெஷின். அந்த வீட்ல டெல்ஸ் போறப்ப கட் பண்ணுவாங்கள. டெல்ஸ் கட்டர் மெஷின். சோ, நிறைய பாலித்தீன் பேக்ஸ், அப்புறம் ரெண்டு பெரிய டிராவல் பேக்ஸ்.
ரெண்டு பேருமே இந்த வேலையை பிரிச்சுக்கறானுங்க. கௌரவம் அனுப்பி நீ அந்த கட்டர் மெஷின்லாம் வாங்கிட்டு வந்துரு. நான் பாலித்தீன் பேக்கும் டிராவல் பேக்கும் நான் வாங்கிட்டு வரேன் அப்படின்னு வீட்ுல இருந்த கான்சன்ட்ரேட் போய் பொருள் எல்லாம் வாங்கிட்டு வரானுங்க. பொருள்ல்லாம் வாங்கிட்டு வந்து கிட்டத்தட்ட 19 பீஸ வெட்டறானுங்க அப்படின்னு நினைக்கிறேன்.
அந்த சரியான கவுண்ட் எனக்கு மறந்துருச்சு. ஆனா கைகளை தனியா வெட்டிடுறானுங்க. கால்களை தனியா வெட்டிடுறானுங்க. தலையை தனியா வெட்டிறானுங்க. வெட்டிட்டு ஒரு பெரிய லார்ஜ் சூட்கேஸ்ல தலையையும் காலையும் வச்சிறானுங்க. இன்னொரு பெரிய லார்ஜ் சூட்கேஸ்ல அந்த உடம்பு பகுதியையும் கை பகுதியையும் வச்சிறானுங்க. வச்சு ஃபுல்லா கக்ளோஸ் பண்ணி வைக்கிறானுங்க.
அந்த பாடி பார்ட்ஸ் எல்லாமே பாலித்தீன் கவர்ல ஃபுல்லா ராப் பண்ணிதான் வைக்கிறானுங்க. கிட்டத்தட்ட இவனுக்கு இந்த விஷயம் எல்லாம் முடிக்கறதுக்கே மதியானம்ரடு மணி ஆயிருது. சோ இதெல்லாம் முடிச்ச அப்புறம் வீட்ட பாக்குறானுங்க. வீடு முழுக்க ஒரே இரத்த வாட அடிக்குது. வீடு முழுக்க வெறே இரத்த கரைகளா இருக்கு. உடனே இந்த ரூபி கௌரவ பாத்துட்டு என்ன சொல்றா அப்படின்னா இங்க பாரு நான் உன்ிட்ட கொஞ்சம் காசு கொடுக்குறேன்.
நீ நேரா ஸ்கூலுக்கு என் பிள்ளைங்களை கூப்பிட போ. என் பிள்ளைங்களை அழைச்சிட்டு வீட்டு கூட்ட்டு வந்துராத. இந்த போனை கையில வச்சுக்க. நம்மளோட பிள்ளைங்களை எதுனா நல்ல ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போய் சாப்பாடு வாங்கி கொடு. எதனா கிரவுண்டுக்கு கூட்டிட்டு போய் விளையாட வை. நான் போன் அடிச்ச அப்புறம் கூட்ட்டு வந்தா போதும். அப்படி இல்லன்னா நானே இந்த இடத்துக்கு வந்துறேன்.
நீ எந்த இடத்துல இருக்கன்னு எனக்கு போன் எடுத்து சொல்லு. அதுக்கு முன்னாடி நம்ம வீட ஃபுல்லா நான் கிளீன் பண்ணி வைக்கிறேன் அப்படின்னட்டு, கௌரவட்ட வண்டி சேர்வைய கொடுத்து, பிள்ளைங்களை போய் நீ பாரு அப்படின்னு அமுச்சு வைக்கிறா. அந்த அமைச்சுவிட்ட கேப்ல இவ ஃபுல்லா வீட எல்லாம் சுத்தம் பண்ணிட்டு இருக்கா. கௌரவம் நேரா அப்ப அந்த பிள்ளைங்க இருக்க ஸ்கூலுக்கு போறான்.
பிள்ளைங்களை அழைக்கிறான். பிள்ளைங்களை அழைச்சிட்டு, ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைச்சுட்டு போய் நல்லா சாப்பாடுல்லாம் வாங்கி கொடுத்துட்டு இருக்கான். வாங்கி கொடுத்துட்டு இருக்கப்பே ரூபி போன் அடிக்கிறா எல்லா வேலையும் நான் இங்க முடிச்சுட்டேன் அப்படின்னு போன் அடிக்கிறான். சரி ஓகே நீ இப்ப நேரா அந்த ரெஸ்டாரண்டுக்கு வா அப்படின்னு அந்த லொகேஷன்லாம் சொல்றான்.
ரூபி அந்த இடத்துக்கு போயிட்டு அப்படியே அப்பயே வந்த மாதிரி எல்லாரும் ஒன்னா சாப்பிட்டுட்டு என்ன சொல்றா அப்படின்னா பிள்ளைங்கள பார்த்துட்டு ரூபி இன்னைக்கு நைட் வந்து நம்ம வந்து ஒரு லாங் ட்ரிப் போக போறோம் கார்ல நம்ம ஜாலியா போயிட்டு வரலாம் அப்படின்ற மாதிரி சொல்றா. அந்த பிள்ளைங்களும் ரொம்ப சந்தோஷத்துல ஆழ்ந்து போகுதுங்க.
அது சின்ன பிள்ளைங்க தன்னோட அப்பா ஏதோ ஒரு கல்யாண வேலையா வெளியூருக்கு போயிருக்காங்க அப்படின்றதுதான் அந்த பிள்ளைங்களோட நினைப்பு. என்ன செய்றாங்க அப்படின்னா கௌரவ் ஒரு காரை வாடைக்கு எடுக்குறானுங்க. காரை வாடகைக்கு எடுத்துட்டு வீட்ல வந்து நிப்பாட்டுறானுங்க. வீட்டுக்குள்ள இருந்து நைட் அந்த ரெண்டு லார்ஜ் சூட்கேஸையும், வெளியில எடுத்து வந்து காரோட டிக்கில வைக்க போறாங்க.
அப்ப அந்த பொண்ணு இருக்கு இல்லையா அந்த குழந்தை அது கேக்குது என்னமா இது இவ்வளவு பெரிய சூட்கேஸா இருக்கு அப்படின்னட்டு. என்ன இருக்கு உள்ள அப்படின்னு துறக்க போயிருக்கு அந்த புள்ளை. உடனே ரூபி என்ன சொல்றா அப்படின்னா, இதெல்லாம் தொடக்கூடாதுமா. ஏன்னா இதுல இருக்குறது வந்து ஒரு பூஜை பொருட்கள் இதெல்லாமே யூஸ் செய்யப்பட்ட பூஜை பொருட்கள்.
இதை வந்து நம்ம வந்து கங்கை ஆத்துல வந்து போட போறோம் அப்படின்ற மாதிரி சொல்லுது. சரி ம்மா அப்படின்னு சொல்லி எல்லாம் கார்ல உட்காந்துறாங்க. நைட் ஒரு பெரிய டிரைவ் போறானுங்க. திற இவங்க வீட்ல இருந்து ஒரு 50 km பெரிய டிரைவ்ங்க. 50 kmக்கு அங்கட்டு போயிட்டு ஒரு சூட்கேஸ் என்ன செய்றாங்க அப்படின்னா ஆத்துல தூக்கி எரிச்சிட்டு வந்துறாங்க. ஒரு சூட்கேஸ் ஆத்துல தூக்கி வந்துட்டு திருப்பி ஒரு சூட்கேஸ திருப்பி எடுத்துட்டு வந்துறானுங்க.
எடுத்துட்டு வந்துட்டு கௌரவம் என்ன சொல்றான்னா, நீ பிள்ளைங்கள போய் தூங்க வை. நான் இதை வேற வேணா போட்டுட்டு வந்துறேன். ரெண்டையும் ஒரே இடத்துல நம்ம போடக்கூடாதுன்னா ஒன்னு மட்டும் போட்டு ஒன்னு எடுத்துட்டு வந்தோம் அப்படிங்கற மாதிரி சொல்லிட்டு, இவன் என்ன செய்றா ரூபி இந்த சைடு பிள்ளைங்களை அரைச்சு போய் திருப்பி ஸ்டோரேஜ் ரூம்லயே தூங்க வைக்கிறான்.
ஏன்னா அந்த வாடைகள் இன்னும் அந்த ரூம்ல இருக்கு. அதனால ஸ்டோரேஜ் ரூம்லயே தூங்க வச்சிட்டு இருக்கான். இந்த கௌரவம் என்ன செய்றான் அப்படின்னா, அந்த ரெண்டாவது பொட்டிய எடுத்துட்டு போய் டிரைனேஜ்ல போடுறான். நான் முன்னாடியே சொன்னேன்ல, அந்த பொட்டியிலதான் உடம்பும், கைகளும் இருந்திருக்கு. அந்த பொட்டிய டிரைனேஜ்ல போட்டு இவன் வீட்டுக்கு வந்துடுறான்.
இப்ப இந்த சம்பவம் எல்லாம் எப்ப நடக்குது அப்படின்னா, நவம்பர் 18-ஆம் தேதி நடந்துகிட்டு இருக்கு. கரெக்டா ஒரு அஞ்சு நாளுங்க. ஒரே டிராமா போடுறா அங்க உள்ள ஊர் மக்களுக்கு எல்லாம் தெரியற மாதிரியே, என் புருஷன் எங்க போனாருன்னு தெரியல. ரொம்ப நாளா காணும் அப்படின்ற மாதிரி தேடிக்கிட்டு இருக்கு. அது மட்டும் இல்லாம பிள்ளைங்களையே ஒரு மாதிரி வந்து புருஷன் காணாம போயிட்டாரு அப்படின்றத பிள்ளைங்களை நம்ப வைக்கலாம்.
ஏன்னா நாளைக்கு இன்வெஸ்டிகேஷன் வந்துட்டா பிள்ளைகளை கூப்பிட்டு இன்வெஸ்டிகேட் பண்ணுவாங்க. குழந்தைங்க மாத்தி மாத்தி பேசிருச்சுன்னா, நம்மள போலீஸ் புடிச்சிரும் அப்படின்னட்டு, குழந்தைகள்ட்ட என்ன சொல்றா அப்படின்னா, இந்த மாதிரி உங்க அப்பாவை காணும், எங்கேயோ ஓடி போயிட்டாரு அப்படின்ற மாதிரி அந்த பிள்ளைகளை நம்ப வைக்கிறா.
பிள்ளைகளை நம்ப வைக்கிறது மட்டும் இல்லாம அந்த பிள்ளைகளை அழைச்சிட்டு போய் இவர் வேலை செஞ்ச இடத்துல போய் பா்கறது, அந்த பிள்ளைகளை அழைச்சிட்டே நாள் முழுக்க தேடுறது, ஸ்கூல்ல லீவ் போட்டு, இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா பயங்கரமான டிராமா குயின்னே சொல்றாங்க அந்த ரூபி. ஊர் ஃபுல்லாவே டிராமா போட்டுட்டு இருக்கா புருஷனை காணும்.
சரிங்க அக்கமுக்கள் உள்ள எல்லாருமே வந்து ரொம்ப கவலையில இருக்க என்ன நல்ல மனுஷன் திடீர்ன்னு காணாம போயிட்டாருன்னு நீ ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துருமா அப்படின்னு சொல்றாங்க. நவம்பர் 24ஆம் தேதி போலீஸ் ஸ்டேஷன்ல போய் போலீஸ் கம்ப்ளைன்ட்டம் பதிவு பண்றா. ஐயா இப்பதான் நான் முதல்ல ஒரு கட்ட சொல்லி இருந்தேன்ல போலீஸ் இந்த ரூபிய கூப்பிடுறாங்க.
இன்வெஸ்டிகேஷன ஸ்டார்ட் பண்றாங்க. ஆனா ரூபி வந்து என்ன செய்றா இது என் புருஷனோட உடம்பு இல்லை அப்படின்னு மறுக்குறா போலீஸ் அப்ப விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் போலீஸ் என்ன செய்றாங்க அப்படின்னா ரூபிட்ட சரி நீ உன்னோட புருஷன் இல்லைன்னு சொல்லிட்டேல உன்னோட புருஷனை கண்டுபிடிக்கணும்னா உன்னோட புருஷனோட ஒரு சில போட்டோகிராப் வேணும் அப்படின்னு சொல்றாங்க.
ஒரு ரெண்டு மூணு போட்டோவ கொடுக்குறா. இதெல்லாம் பாத்தா எங்களுக்கு நிறைய போட்டோஸ் வேணும் அப்படின்ற மாதிரி சொல்றாங்க. சரின்னு ரூபி இன்னும் நிறைய போட்டோஸ் வந்து கொடுக்க ஆரம்பிக்கிறா. அப்பதான் போலீஸுக்கு ஒரு பயங்கரமான கக்ளூ கிடைக்குதுங்க. அதாவது அந்த ஒரு உடம்பை மட்டும் எடுத்தாங்கல்ல அந்த ட்ரைனேஜ்ல இருந்து.
அப்பயே ஒரு டீஷர்ட் பீஸ்மே அந்த உடம்பு மேல இருந்துச்சு. அந்த டீஷர்ட் பீஸ்ல என்ன போட்டுருந்துச்சு அப்படின்னா, டைம்ஃபார் சேஞ் அப்படின்ற ஒரு இங்கிலீஷ் வாக்கி அந்த டீஷர்ட்ல இருந்துச்சு. இது எல்லாமே போலீஸ் முன்னாடியே போட்டோகிராப்லாம் எடுத்து வச்சிருந்துருக்காங்க. இந்த ரூபி ஷேர் பண்ணல ஒரு சில போட்டோஸ். அந்த ஒரு சில போட்டோஸ்ல ஒரே போட்டோல மட்டும் அந்த இவரோட கணவரான ராகுல் அந்த டைம்ஃர் சேஞ் அப்படின்ற ஒரு வாக்கியத்தோட ஒரு டீஷர்ட் போட்டுருக்காரு.
இத வச்சுதான் போலீஸ் கன்பார்மே பண்றாங்க. கண்டிப்பா இது ராகுளோட டெட் பாடிதான். இவதான் என்னமோ பண்ணிருக்கான் அப்படின்றத பர்பெக்ட்டா கன்பார்ம் பண்ணிட்டாங்க. ஆனா எல்லாம் யோசிச்சு பாருங்களேன். சும்மா நம்ம வந்து இந்த மாதிரி போட்டோகிராப்ஸ் வச்சு நம்ம வந்து சொல்லிட முடியாது இல்லையா? சோ இதனாலயே திருப்பி ரூபிய கூட்டு இன்வெஸ்டிகேட் பண்றாங்க.
அப்ப இந்த விஷயத்தல்லாம் சொல்லும்போது ரூ என்ன சொல்றா அப்படின்னா இங்க பாருங்க உங்களுக்கு பாடி கிடைச்சிருச்சு ஆமா கரெக்ட்தான். இத பாடிய வச்சு இதுதான் என் கணவர்ன்னு உங்களால எப்படி ஐடென்டிஃபை பண்ண முடியும்? அதுக்குதான் தலையும் இல்ல காலும் இல்ல கையும் இல்ல அப்புறம் எப்படி வந்து என்ன அரெஸ்ட் பண்ண முடியும் உங்களால என்ன அரெஸ்ட் பண்ணாலும் கூட கோர்ட்ல எப்படி போய் நிரூபிக்க அப்படின்ற மாதிரி ரொம்ப எகத்தாளமா பேசிருக்கான்.
நான் முன்னாடியே சொன்னேன் இவ ஒரு கேவலமான கேரக்டர். இவளுக்கு இந்த கேஸ் இதெல்லாம் வந்து சாதாரண விஷயம் இல்லையா? ஏன்னா தம்பி அரெஸ்ட் பண்ண வந்தப்பே போலீஸ்ல சண்டை போடுறவ இன்னொன்னு பொய்யான கேஸ போட்டு காசு பறிக்கிறவ இவளுக்கு என்ன யோசிச்சிருக்கா அப்படின்னா அந்த அளவு படிப்பறிவு இல்ல போல இந்த டிஎன்ஏ டெஸ்ட் இதெல்லாம் பத்தி இவளுக்கு தெரியல போல இதனாலயே தலை இல்லாத கை கால் இல்லாத முண்டத்தை எப்படி நீ வந்து ஒரு சாட்சியா சொல்லி என்னை எப்படி அரெஸ்ட் பண்ணுவ அரெஸ்ட் பண்ணாலும் கூட எப்படி நீ கோர்ட்ல நிரூபிப்பி அப்படின்னு போலீஸ்டே கான்பிடெண்டா சேலஞ்ச் பண்ணி இருக்காங்க
இன்வெஸ்டிகேஷன் பண்ணப்ப போலீஸ் சும்மா இருப்பாங்களா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ஆரம்பிக்கிறாங்க அதாவது இந்த ரெண்டு குழந்தைங்க இருக்காங்கள அவங்கள இவளோட டிஎன்ஏவும் அந்த சரலத்தோட டிஎஏவும் மேட்ச் ஆகுதா அப்படின்றத பார்கறாங்க. அந்த டிஎன்ஏ மேட்ச் ஆகுது.
ரெண்டாவது இவளோட வீட்டுக்கு போயிட்டு எது கிடைக்குதா அப்படின்றத பாக்குறாங்க.
அப்ப நிறைய விஷயம் கிடைச்சிருக்குங்க. ஃபர்ஸ்ட் விஷயம் என்ன கிடைக்குது அப்படின்னா ஒரு ராடு கிடைக்குது. அதாவது இவ அந்த ராட வச்சு அடிச்சிட்டு அந்த ராட கழுவில்லாம் இருக்காளுங்க. ஆனா அந்த பிளட் செல்ஸ்னு ஒன்னு இருக்கும்ல அதை யாராலயும் கழுவ முடியாதுல்ல. இவங்க அதுல பிளட் செல்ஸயும் கண்டுபிடிக்கிறாங்க. அது மட்டும் இல்லாம அந்த பிளட் செல்ஸ் ராகுளோடது அப்படிங்கறதை கண்டுபிடிக்கிறாங்க.
ரெண்டாவது விஷயம் என்னன்னா எல்லாமே முடிச்சுட்டு இவ போய் குளிப்பால பாத்ரூம்ல எப்படி இருந்தாலும் கையில உடம்புல ரத்தம் இருக்குல்ல அப்ப பாத்ரூம்ல எதனா இருப்பா அப்படின்னு யோசிக்கிறாங்க. பாத்ரூம்ல போய் கீழ ஃபுல்லா சர்ச் பண்ணி பாக்குறாங்க. இவங்களால கண்டுபிடிக்க முடியல. ஏன்னா பெர்பெக்ட்டா கிளீன் பண்ணிருக்காங்க அந்த ஆசிட்லாம் போட்டு.
சரின்னு அப்ப என்ன யோசிக்கிறாங்கன்னா அங்க ஒரு பெரிய ஹீட்டர் இருந்துருக்கு. அந்த ஹீட்டர்ல எதாவது சாம்பிள்ஸ் கிடைக்குதான்னு பாக்குறப்ப அந்த ஹீட்டர்லயும் பிளட் சாம்பிள்ஸ் இருந்திருக்கு. யாரோடது? ராகுளோடது. ரெண்டாவது விஷயம் கண்டுபிடிச்சிட்டாங்களா? மூணாவது விஷயம் நிறைய இடத்துல வீட்டுக்குள்ள ராகுளோட பிளட் ஸ்டைன்ஸ் இருந்திருக்கு.
அதையுமே பயங்கரமா கண்டுபிடிச்சு இவள அரெஸ்ட் பண்ணி இப்ப ஜெயில்லயும் போட்டாங்க எந்த அளவுக்கு கேவலமான கதையா இருக்கு அப்படின்றத பாருங்களேன் கிட்டத்தட்ட லவ் பண்ணி நல்லபடியா 15 வருஷம் கல்யாண வாழ்க்கை வாழ்ந்துருக்காங்க அவங்க அவன் ஒரு வருஷத்துல டிவோர்ஸ் வாங்குறான் ரெண்டு மாசத்துல டிவோர்ஸ் வாங்குறான்ங்கள பாருங்களேன் 15 வருஷம் வாழ்ந்துட்டு தன்னோட புருஷனுக்கு எப்படி இப்படிப்பட்ட துரோகம் பண்ண முடிஞ்ுச்சு அப்படின்றது எனக்கு சத்தியமா தெரியவே இல்லை இன்னொரு விஷயம் இந்த புருஷன் ரொம்ப கண்மூடித்தனமா தன்னோட வைஃப் நம்பிட்டாரு.
மூணாவது விஷயம் என்ன அப்படின்னா வெளி ஆட்களை முதல்ல வீட்டுக்குள்ளயே சேர்க்க கூடாதுங்க. யாருங்க அவன் அபிஷேக் யாருங்க அவன் கௌரவ எவனையோ கொண்டு வந்து தம்பின்னு சொன்னா வீட்ல சேர்த்துக்கிறது அப்படின்றது ஒரு மிகப்பெரிய கேள்வியா இருக்கு. பாவம் இப்ப கடைசில கஷ்டப்படுறது யாரு அப்படின்னா அந்த ரெண்டு குழந்தைங்கதான். பாவம் அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு என்ன தெரியும் ஒண்ணுமே தெரியாது யோசிச்சு பாருங்களேன் இப்ப இந்த அம்மாக்காரி செஞ்சுட்டு போயிட்டா என்ன எப்படியுமே நாளைக்கு வந்து அந்த கௌரவோ அபிஷேகோ வந்து இந்த குழந்தைகளை பாத்துக்க போறது கிடையவே கிடையாது ஏன்னா அவனுங்களே
உடம்புக்காகதான் வந்து யாரையும் ரூபிட்ட பழகுனவனுங்க இந்த ரூபியும் ஒழுங்கா பாத்துக்க முடியாது அந்த சமுதாயத்துல யோசிச்சு பாருங்க முதல்ல வெளியில வந்தாதான் இவ்வளவு கொடூரமா கொலை பண்ணிட்டு கண்டிப்பா போய் ஜெயில்ல போய் கம்பிதான் எண்ணு போறா. இந்த ரெண்டு குழந்தைங்க வளர்றத பாருங்களேன். என்னதான் அந்த குழந்தைங்க நல்லபடியா வளர்ந்தாலுமே சுத்துள்ள மக்கள் எல்லாம் நம்ம எவ்வளவுதான் நம்ம வந்து எல்லாருமே நல்ல மக்கள்ன்னு சொன்னாலும் எல்லாமே இந்த ரெண்டு குழந்தைகளை பார்கற கண்ணோட்டமே இவன மாதிரி ஒரு கேவலமான தாய்க்கு பிறந்த குழந்தைகள் தானே அப்படின்னுதான்
பாப்பானுங்க. நீங்க பாக்க மாட்டீங்க. நான் பாக்க மாட்டேன். ஆனா இப்படியான மக்கள் இருக்காங்க. நம்ம ஒண்ணுமே பண்ண முடியாது. இந்த சமுதாயத்துல சும்மாவே ஒரு பெண் குழந்தை நல்லபடியா வளர்றதே 1008 பிரச்சனை இருக்கு. இதுல இந்த குழந்தைகளோட வளர்ச்சியை பத்தி யோசிச்சு பாருங்க. உண்மையில ரொம்ப பயமா இருக்கு. கண்டிப்பா கவர்மெண்ட் எதனா இந்த ரெண்டு குழந்தைகளுக்கு பண்ணுவாங்க அப்படின்றதை நம்புவோம்.
சரிங்க இன்னொரு முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா என்னோட சேனல் இப்பதாங்க ஒரு சின்ன சேனல் இப்பதான் வந்து ஒரு 5000 சப்ஸ்கிரைபர் இருக்கு. அதாவது நீங்க நிறைய பேர் சொல்றீங்க இந்த மாதிரி நல்லாவே இல்ல போரிங்கா இருக்கு வீடியோ போடாத அப்படின்னட்டு என்ன பண்றது ஏதோ எனக்கு புடிச்சிருக்கு இந்த YouTubeல எதுனா பண்ணனும் அப்படின்னு அதனாலதான் வீடியோ பதிவு போட்டுட்டு இருக்கேன்.
சோ கண்டிப்பா நான் ஏத்துக்கறேங்க எனக்கு அந்த அளவு பேச தெரியாதுதான் அந்த அளவு போர்வையா பேச தெரியாதுதான் என் வாய்ஸ் சரி இருக்காதுதான். நான் போக போக திருத்திக்கிறேன். இப்பதான ஆரம்பிச்சிருக்கோம். 5000 சப்ஸ்கிரைபர் தான் இருக்காங்க. கண்டிப்பா நான் போக போக என்னால முடிஞ்ச அளவு நல்லபடியா வீடியோ போட ட்ரை பண்றேன்.
ஒருவேளை என்னோட குரல் பிடிக்கல நல்லாவே இல்லை அப்படின்னு சொல்றவங்களுக்கு என்னோட மிகப்பெரிய மன்னிப்பை நான் கேட்டுக்கறேன். உங்கள வந்து என்னால சாட்டிஸ்பை பண்ண முடியல. கண்டிப்பா சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. ஒரு நாள் நீங்களும் சாட்டிஸ்பை ஆவீங்க. என்ன நம்புனீங்க அப்படின்னா ஒரு லைக் பண்ணிட்டு மறக்காம கமெண்ட்ல ட்ரை பண்ணுடா மாப்பிள்ளை அப்படின்ற மாதிரி கமெண்ட் எதுனா போட்டு விடுங்க நன்றி வணக்கம்.
