ரயிலில் 2 குழந்தைகளுடன் பயணித்த தாய்க்கு நடந்த கொடுமையை பாருங்க..!!

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? எந்தவிதமான சிகிச்சை எடுக்க வேண்டும்?
இந்தியாவில் கரோனா மற்றும் குரங்கு அம்மைக்கு பிறகு, தக்காளி காய்ச்சல் குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இது தக்காளியால் பரவும் காய்ச்சல் அல்ல. பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தோன்றும் சிறிய சிவப்பு நிற கொப்புளங்கள் நாளடைவில் பெரிதாகி தக்காளி போன்ற வடிவத்தை பெறுவதால் இப்பெயர் வந்தது. இது காக்சாக்கி A16 என்ற வைரஸால் ஏற்படுகிறது.

தோல் எரிச்சல், சிவப்பு நிற கொப்புளங்கள், கடுமையான காய்ச்சல், மூட்டு வலி மற்றும் உடல் சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நெருங்கிய தொடர்பு மூலம், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் எளிதில் பரவுகிறது.

எனவே, பாதிக்கப்பட்ட குழந்தைகளை 5 முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்துவது அவசியம். காய்ச்சிய குடிநீரை பருகுவது, அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் சுகாதாரத்தை பேணுவது இந்நோய் பரவலை தடுக்கும்.
தற்போது இதற்கு பிரத்யேக மருந்துகள் இல்லை என்றாலும், டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவிற்கு அளிக்கப்படும் பாரசிட்டமால் போன்ற சிகிச்சைகளே இதற்கும் பின்பற்றப்படுகின்றன. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *