MGR மட்டும் தான் அப்படி நடிக்க முடியுமா? கொதித்த சிவாஜி,சரோஜாதேவியை ஏமாற்றிய சிவாஜி

MGR மட்டும் தான் அப்படி நடிக்க முடியுமா? கொதித்த சிவாஜி #சரோஜாதேவியை ஏமாற்றிய சிவாஜி
இந்த படத்தில் சிவாஜி கணேசன் மிகவும் அழகாகவும் ஸ்லிம்மாகவும் நடித்திருந்தார். மேலும் சிவாஜி கணேசன் அவர்களுடன் முதலில் ஜோடியாக இணைந்து நடித்தவர் கே. ஆர். விஜயா அவர்கள் பின்பு இந்த படத்தில் கடைசி பாடலாக வரும் தட்டட்டும் கை தழுவட்டும் என்ற பாடல் காட்சியில் நடிக்கும் போது சிவாஜி சாட்டையால் ஆடும் போது அடிப்பது போல் இருந்தது.

இந்த காட்சியில் கே. ஆர். விஜயா அவர்கள் அப்போது பிரசவ நிலையில் இருந்ததால் வேறு நடிகையை வைத்து பாடலையும் படத்தையும் எடுத்து கொள்ளுங்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆன கே. பாலாஜியிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

பின்பு இந்த படத்தை கைவிடும் தருவாயில் பாலாஜியும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரும் இருந்தபோது கதாசிரியர் ஜாவர் சீதாராமன் அவர்கள் இந்த படம் தெலுங்கில் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஆஸ்த்திரபரலு திரைப்படம். இதை தமிழிலும் எடுத்தால் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கூறினார். இருந்தபோதிலும் படத்தில் நடிகை பிரச்சனையை ஜாவர் சீதாராமன் அவர்கள் கே. பாலாஜி உடன் இணைந்து நடிகை சரோஜா தேவி அவர்களை முடிவு செய்தார்

ஆனால் இயக்குநர் ஏ. சி. திருலோகசந்தர் அவர்கள் திருமணத்திற்குப் பிறகு சரோஜாதேவி அவர்கள் உடல் கொஞ்சம் தொந்தியும், தொப்பையுமாக குண்டாகவும், பருமனாகவும் இருந்ததால் காட்சியில் அவர் நடித்தால் சரியாக வருமா என்று கேட்டவுடன் அதற்கு அந்த கதைமேதை ஜாவர் சீதாராமன் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட ஷாட்பெல்ட் என்ற பெல்ட்டை சரோஜாதேவியின் வயிற்றில் அணிந்து ஒல்லியாக இருப்பதை போன்று உடல் தேகத்துடன் சரோஜாதேவியை நடிக்க வைத்தார் ஜாவர் சீதாராமன் அவர்கள் பின்பு அந்த படமும் தட்டட்டும் கை தழுவட்டும் பாடல் காட்சியும் முழுமையாக காட்சி படமாக்கப்பட்டு படம் வெற்றி பெற்றது.

அது மட்டும் இல்லாமல் ஜாவர் சீதாராமன் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக சரோஜாதேவிக்கு தந்தை வேடத்தில் இப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *