முல்லைத்தீவில் தேர் திருவிழாவில் நடந்த சோகம்.. பறிபோன பெண்ணின் உ*யிர்.. இதோ வீடியோ

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (04) சிறப்புற நடைபெற்றபோது தேர் வீதி உலா வரும்போது தேரின் முடி கலசம் கட்டப்பட்டிருந்த மின் இணைப்பு வயரில் சிக்கி கழன்று வீழ்ந்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய சங்கரப்பிள்ளை சசிகலா என்ற பெண்ணே இதன்போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமiனையில் வைக்கப்பட்டுள்ளது காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் சென்று பார்வையிட்டுள்ளார் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *