கருஞ்சீரக தண்ணீர் தினமும் குடித்தால் உடலில் என்ன நடக்கும்

வணக்கம் நண்பர்களே, உங்களோட உடல்நலம் எங்களுக்கு ரொம்பவே முக்கியம். நீங்க காலையில ஒரு கப் கருஞ்சீரக தண்ணி குடிச்சா உடம்புல இருக்கற கொழுப்பு மெதுவா குறைய ஆரம்பிக்கும். சுகர் லெவல் கட்டுப்பாட்டுல வரும். செரிமானம் நல்லா நடக்கும். சிலருக்கு முடி உதிர்றது கூட குறைய ஆரம்பிக்கும். என்னது? கருஞ்சீரகம் உண்மையிலேயே இவ்வளவு சக்தி வாய்ந்ததா? ஆமாங்க.ஏன்னா இந்த சின்ன கருப்பு விதையிலேயே உடம்புக்கு தேவையான சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைய இருக்கு. பழங்காலத்தில இருந்தே இந்த கருஞ்சீரகம் ஒரு இயற்கை மருந்தா பயன்படுத்திட்டு இருக்கும். ஆனா ஒரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? இந்த கருஞ்சீரகம் தண்ணீர நீங்க எப்படி குடிக்கிறீங்கன்றதுதான் முக்கியம். தவறா குடிச்சா அதோட முழு நன்மையும் கிடைக்காது. சரியா குடிச்சா உடல்ல நிறைய அதிர்ச்சியுற்ற மாற்றங்கள் நடக்கும். இந்த வீடியோல கருஞ்சீரக தண்ணீர் குடிச்சா உடல்ல என்ன நடக்கும்? அதுல இருக்கிற முக்கிய சத்துக்கள் என்ன? யாரெல்லாம் குடிக்கலாம்? எப்ப குடிச்சா அதிக நன்மைகள் கிடைக்கும்னு எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சுக்க போறோம். ஒரு வீடியோ உங்க ஹெல்த்தையே சேஞ்ச் பண்ணலாம். அதனால இந்த வீடியோவை கடைசி வரைக்கும் ஸ்கிப் பண்ணாம பாருங்க.

வாங்க வீடியோக்குள்ள போகலாம். ஃர்ஸ்ட் கருஞ்சீரகம்னா என்னன்னு பாப்போம். கருஞ்சீரகம் ஒரு சின்ன கருப்பு நிற விதை. இதை நம்ம சமையல்ல அதிகமா பயன்படுத்துறது இல்லை. இருந்தாலும் கருஞ்சீரகத்தை மருத்துவ குணங்கள் நிறைஞ்ச ஒரு சூப்பர் ஃபுட்ன்னே சொல்லலாம். இதுல ஆன்டி ஆக்சிடன்ட், நார்்சத்து, இரும்பு சத்து, கால்சியம், பொட்டாசியம் மாதிரியான சத்துக்கள் அதிகமா இருக்கு.

இந்த சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளையும் தரும். நிறைய பேருக்கு இருக்கிற பெரிய பிரச்சனைதான் இந்த உடல் பருமன். கருஞ்சீரக தண்ணீர் குடிச்சா உடல்ல இருக்கற அதிகப்படியான கொழுப்பு மெதுவா குறைய ஆரம்பிக்கும். மெட்டபாலிசம் அதிகரிக்கும். ஃேட் பர்னிங் ப்ராசஸ் வேகமா நடக்கும். அதனாலதான் நிறைய பேரு வெயிட் லாஸ் ட்ரிங்க்ல கருஞ்சீரகத்தை சேர்க்கறாங்க.கருஞ்சீரகம் பிளட் சுகர் கண்ட்ரோலுக்கு ஹெல்ப் பண்ணும். இது இன்சுலின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். பிளட் சுகர் ஸ்பைக்க குறைக்கும். உங்களுக்கு அடிக்கடி வயிற்று வீக்கும், அஜீரனோ, வாயு பிரச்சனை மாதிரியான பிரச்சனைகள் இருந்தா, கருஞ்சீரக தண்ணீர் வந்து ரொம்ப உதவியா இருக்கும். இது டைஜெஸ்டிவ் என்சைம அதிகரிக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வயிரை லேசா வச்சிருக்க உதவும். கருஞ்சீரகம் ஒரு இம்மயூனிட்டி பூஸ்டர். இதுல இருக்கற ஆன்டி ஆக்சிடன்ட் உடல்ல இன்பெக்ஷன், பாக்டீரியா, வைரஸ்கள்ல இருந்து பாதுகாக்க உதவும். அதனாலதான் சிலர் மழை காலத்துல இந்த தண்ணீரை குடிக்கிறத வழக்கமா வச்சிருக்காங்க. கருஞ்சீரக தண்ணீர் குடிச்சா பேட் கொலஸ்ட்ரால் குறையும். பிளட் சர்க்குலேஷன் மேம்படும்.

இதனால இதய நோய் அபாயம் குறையும். கருஞ்சீரகத்தில இருக்கிற ஆன்டி ஆக்சிடன்ட் ஸ்கின் டேமேஜ் குறைக்கும். முகப்பருவை கட்டுப்படுத்தும். தோலை ஆரோக்கியமா வச்சிருக்கும். கருஞ்சீரகத்துல இருக்கற அயனும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸும் உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஹேர்ஃால குறைக்கிறதுக்கு உதவும். இந்த கருஞ்சீரக தண்ணீரை எப்படி ரெடி பண்றதுன்னு பார்ப்போம். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்தை எடுத்துக்கோங்க. அதை ஒரு கப் தண்ணீர்ல நைட் ஃபுல்லா ஊற வைங்க. காலையில அதை கொஞ்சமா கொதிக்க வச்சு வடிகட்டிட்டு குடிங்க. விருப்பப்பட்டா கொஞ்சமா தேன் இல்லைன்னா லெமன் கூட சேர்த்துக்கலாம். கருஞ்சீரக தண்ணீரை எப்ப குடிக்கணும்னு பார்ப்போம். கருஞ்சீரக தண்ணீரை காலையில வெறும் வயித்துல குடிச்சா அதிகமான நன்மைகள் கிடைக்கும்.

யாரெல்லாம் கவனமா இருக்கணும்னு பார்ப்போம். கர்ப்பிணி பெண்கள் லோ பிபி உள்ளவங்க தொடர்ந்து வேற ஏதாவது பிரச்சனைக்காக மருந்துகள் எடுத்துட்டு இருக்கறவங்க டாக்டர் அட்வைஸ்க்கு பின்ன குடிக்கிறது நல்லது. இந்த ஒரு சின்ன விதை ஆனா உடம்புக்கு ரொம்பவே பெரிய நன்மைகளை தர்றதுதான் இந்த கருஞ்சீரகம். தினமும் கருஞ்சீரக தண்ணீர் குடிச்சா செரிமானம் மேம்படும். பாடி வெயிட் கட்டுப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனா எந்த ஒரு இயற்கை மருந்தையும் போல அளவோட பயன்படுத்துறது ரொம்பவே முக்கியம். உங்க ஆதரவு எங்களுக்கு ரொம்ப முக்கியம். நீங்க இல்லாம இந்த சேனல் இல்ல. இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணிட்டு சப்போர்ட் பண்ணுங்க. தேங்க்யூ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *