அதிக செல்போன் பயன்பாடு.. சிறார் உட்காரும் நிலையிலும் கவனம் தேவை.. மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?

தலைகுனிந்து செல்ஃபோன் பார்க்கும் பழக்கம் சிறார்களின் உடல் மற்றும் மனநலனுக்கு ஆபத்தாகும். சரியான உட்காரும் நிலையை பின்பற்றுவதும், செல்ஃபோன் நேரத்தை கட்டுப்படுத்துவதும் அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சமீபகாலமாகவே சிறார்கள் மத்தியில் செல்ஃபோன் பார்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. செல்ஃபோன் பயன்படுத்துவதே, குழந்தைகளின் உடல்நலன் மற்றும் மனநலனில் ஆபத்து ஏற்படுத்திவிடும் என பல்வேறு ஆய்வுகள் எச்சரித்து வரும் நிலையில், சிறார்கள் செல்ஃபோனை எப்படி உட்கார்ந்து பார்க்கிறார்கள் என்பதும் கவனம் செலுத்த வேண்டிய விஷயமாக உருவெடுத்துள்ளது. பல குழந்தைகள் நீண்ட நேரம் செல்ஃபோன் பார்க்கும்போது தலைகுனிந்த படியும், முதுகுத்தண்டை வளைத்தபடியும் உட்கார்ந்து பயன்படுத்துகின்றனர்.

இதே போன்று ஒரே நிலையில் அதிக நேரம் இருந்தால், பல்வேறு உடல்நல பிரச்சினைகள் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன் திரையை கண்களுக்கு அருகிலோ, மிகவும் கீழே வைத்து பார்க்காமல், முடிந்தவரை சரியான உயரத்தில் வைத்து பயன்படுத்துவது நல்லது. செல்போனை முழுமையாகத் தவிர்க்க முடியாத சூழலில், சிறார்களின் ஸ்கீரீன் டைமைக் கட்டுப்படுத்துவதோடு, சரியான நிலையில் அமர்ந்து பயன்படுத்துவதையும் கவனிப்பது முக்கியம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *