வணக்கம் மக்களே நாம இந்த ஆரோக்கியமான பதிவுல 60 வயதில் நம்முடைய உடல் எலும்புகளை பலம் பெற வைத்துக் கொள்வதற்கு நம்ம என்னென்ன மாதிரியான ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளணும். என்னென்ன மாதிரியான வாழ்க்கை நடைமுறைகளை கடைபிடிக்கணும். குறிப்பா என்னென்ன மாதிரியான உணவுகளை எல்லாம் நாம் எடுத்துக்கொள்ள கூடாது அப்படின்றதையும் நம்ம விளக்கமாக பார்க்க போறோங்க.
நம்ம 60 வயதை எட்டும்போது மனித உடலினுடைய அந்த எலும்பு அடர்த்தி அதாவது போன் டென்சிட்டி இயற்கையாகவே குறைய தொடங்க ஆரம்பிக்கும். குறிப்பாக பாத்தீங்கன்னா பெண்களுக்கெல்லாம் அந்த மாதவிடாய் நின்றதுக்கு அப்புறம் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டின் காரணமாகவும் ஆண்களுக்கு வயது முதிர்வின் காரணமாகவும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் வரும்.
இதன் காரணமாக நமக்கு ஆஸ்டியோபோரோசிஸ் எலும்பு மெலுவி நோய், மூட்டு வலி, எலும்புறுக்கி, முடக்குவாதம், எலும்பு மஜ்ஜைகள்ல் ஏற்படக்கூடிய பிரச்சனை, மூட்டு இளர்ச்சி போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் இருக்கும். இதை சரி பண்றதுக்கு நம்ம ஊட்டச்சத்துக்கள் இருக்கக்கூடிய எலும்புகளுக்கு ஊட்டச்சத்துக்கள் தரக்கூடிய உணவுகள் எடுத்து கொள்ளணும்.
அந்த உணவுகளை நம்ம விளக்கமா பார்ப்போம். அதை பத்தி பார்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோவுக்கு மட்டும் ஒரு லைக் கொடுத்துட்டு இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் ஷேர் ஐகானை கிளிக் பண்ணி ஷேர் பண்ண மறந்துராதீங்க ஷேர் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க இது போன்ற அப்டேட்ஸ்களை நீங்க தொடர்ந்து பார்க்கறதுக்கு நம்முடைய ஹெல்த் நியூஸ் தமிழ் சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க பக்கத்துல இருக்கக்கூடிய பெல் பட்டனையும் கிளிக் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷனையும் செட் பண்ணி வச்சுக்கிட்டீங்க அப்படின்னாலும் நாங்க போடக்கூடிய எல்லா அப்டேட்ஸும் உங்களுக்கு
நோட்டிபிகேஷன் அடிக்கடி வந்து சேரும். சரி வாங்க மக்களே இப்ப வீடியோக்குள்ள போயிடலாம். நீங்க கேழ்வரகு எடுத்து கொள்ளும்போது உங்களுடைய உடல் எலும்பு பலமாக இருக்குங்க. இப்ப தமிழ்நாட்டில பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய கேழ்வரகு கால்சியம் சத்து நிறுத்தரக்கூடிய மிகச்சிறந்த தானியங்கள ஒன்று. 60 வயதுக்கு அப்புறம் நம்மளுடைய எலும்பு மற்றும் பற்களினுடைய உறுதிக்கு கேழ்வரகு உதவி பண்ணுங்க.
அதுக்கான காரணம் என்னன்னா கேழ்வரகுகள் இருக்கக்கூடிய சத்துக்கள்தான். கேழ்வரகுகள்ல பார்த்தீங்கன்னா கால்சியம், இரும்புச் சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் நார் சத்துக்கள் எல்லாமே இருக்கு. இது எல்லாமே எலும்புகள் வந்து தேய்வடைவதை உங்களுக்கு முன்னாடியே தடுக்குறதுக்கு உதவி பண்ணும். இப்ப நீங்க எப்படி சாப்பிடலாம் கேழ்வரகு அப்படின்னு பாத்தீங்கன்னா காலையில நீங்க வந்து கேழ்வறகு கூழ், கேழ்வரகு தோசை அல்லது கேழ்வரகு புட்டு செய்து சாப்பிடலாம்.
மாலையில கேழ்வரகு கலி மாதிரி எடுத்துக்கலாம். அல்லது கேழ்வரகு அடை மாதிரி நீங்க தயாரித்து சாப்பிடலாம். இது எல்லாமே உடல் உறுதிக்கு மூட்டு வலிக்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வாக இருக்கும். உடலை உறுதி பெறவைக்கும் எலும்புகளை வலுப்படுத்தி. எல் மற்றும் எள் உருண்டை நீங்க எடுத்துக் கொள்ளும் போதுமே உங்களுடைய உடல் எலும்புகளை நீங்க பலம் பெறவைத்து கொள்ளலாம்.
ஏன் அவசியம் இந்த எல் உருண்டை எலும்புகளை பலப்படுத்துறதுன்னு பாத்தீங்கன்னா, எழில்ல இருக்கக்கூடிய கால்சியம் மற்றும் துத்தநாகம் என்று சொல்லக்கூடிய ஜிங்க் சத்துக்கள் இது எல்லாமே எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறதுக்கும் எலும்பு முறிவுகள் ஏற்படுவதை தடுக்கறதுக்கும் பெரிதும் உதவி பண்ணும். இதுல இருக்கக்கூடிய சத்துக்கள்தான் அதுக்கான காரணமே.
அதிகப்படியான கால்சியம், காப்பர், மேங்கனீஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் எல்லாமே இதுல இருக்கு. நீங்க இந்த கருப்பு எள்ு இதெல்லாமே எப்படி சாப்பிடலாம் வெள்ளை எள் எப்படி சாப்பிடலாம்னு பாத்தீங்கன்னா கருப்பு எள் அல்லது வெள்ளை எள் லேசாக வறுத்து பொடி செய்து சட்னி அல்லது பொடிகளுடன் நீங்க சேர்த்துக்கலாம். இல்லன்னா பனை வெல்லம் சேர்த்து செய்த அந்த எள் உருண்டையை தினசரி ஒரு எள் உருண்டை அப்படின்னு சாப்பிடும்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எல்லாம் அந்த எலும்பு மூட்டுகளுக்கு இருக்கக்கூடிய பலத்தை வந்து இன்னும் இன்னும் அதிகப்படுத்திக்கலாம்.
எலும்புகள் பலவீனம் அடையாது உங்களுக்கு. பால் மற்றும் பால் பொருட்கள் நம்ம எடுத்து கொள்ளும்போது எலும்புகளை 50 60 வயதுகளுமே நம்ம பலமாக வைத்து கொள்ளலாம். மில்க், கர்டு, பன்னீர் இது மாதிரிலாம் நம்ம சாப்பிடனும். இது ஏன் எலும்புகளுக்கு அவசியம்ன்னு பாத்தீங்கன்னா, எலும்புகளினுடைய கட்டமைப்பிற்கு, மிக அடிப்படையிலான கால்சியம் சத்து வளமான அளவுல பால் மற்றும் பால் பொருட்கள்ல இருக்கு.
சோ, குறிப்பா பாத்தீங்கன்னா, மனித உடலால எளிதில் உரிஞ்சக்கூடிய உரிஞ்சப்படக்கூடிய வடிவங்கள்ல கால்சியம் வந்து பால் மற்றும் பால் பொருட்கள் இருக்கு. அப்ப உடனடியாக பாஸ்ட்டா நமக்கு வந்து கால்சியம் கிடைக்கும். உடனடியாக எலும்புகள் பலமாக மாறும். சத்துக்கள் பாத்தீங்கன்னா இப்ப இந்த கால்சியம் உயர்தர புரோட்டீன் ஹை குவாலிட்டி புரதம்னு சொல்லுவோம்.
அப்பறம் விட்டமின் ப12 மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எம கிடைக்கும். இத நம்ம எப்படி சாப்பிடலாம்னு பாத்தீங்கன்னா தினமும் நீங்க உணவுகளை சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் ஒரு டம்ளர் பசும் பால் நீங்க எடுத்துக்கலாம். அதாவது கொழுப்பு வந்து குறைந்த கொழுப்பு இருக்கக்கூடிய பால் தான் எடுத்துக்கணும். ஏன்னா 60 வயதுக்கு அப்புறம் அதிக கொழுப்பு இருக்கக்கூடிய பால்களை நம்ம எடுத்துக்கொள்ள கூடாது.
இப்ப நீங்க மோர் அல்லது தயிரை வந்து உணவுகளை சேர்த்துக் கொள்வது செரிமானத்தை மேம்படுத்துறதோட கால்சியம் தேவையுமே உங்களுக்கு பூர்த்தி செய்யும். பன்னீர் அல்லது பாலாடை கட்டி மிதமான அளவுல நீங்க உங்களுடைய உணவுகளை நீங்க சேர்த்துக் கொள்ளும் போது 50 60 வயதுகளுமே எலும்புகள் வந்து வலுவாகதான் இருக்கும். இரவு தூங்குறதுக்கு முன்னாடி சாதாரணமா நீங்க வந்து சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் நீங்க வந்து பாத்தீங்கன்னாந்த அதாவது தூங்க போறதுக்கு முன்னாடி ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் நீங்க
குறிப்பா வந்து பசும் பால் எடுத்து கொள்வது எல்லாமே தூக்கத்தினுடைய தரத்தையுமே உங்களுக்கு மேம்படுத்தும் எலும்புகளையுமே வலுப்படுத்தும். முருங்கை கீரை மற்றும் பச்சை கீரைகள் நிறைய நம்ம வந்து எடுத்துக்கொள்ளலாம். இது ஏன் எலும்புகளை வலுப்படுத்துவதற்கு அவசியம் அப்படின்னு பாத்தீங்கன்னா முருங்கை கீரை எலும்புகளுக்கு தேவையான பல சத்துக்களை வந்து உள்ளடக்கி இருக்கக்கூடிய இயற்கையினுடைய உணவாக இருக்கு.
குறிப்பா பால்ல இருக்கறதை விட அதிகப்படியான கால்சியம் மற்றும் இரும்புச் சத்து முருங்கை கீரையில இருக்கு. இதுல இருக்கக்கூடிய சத்துக்கள் பாத்தீங்கன்னா கால்சியம், இரும்புச் சத்து, விட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் இது எல்லாமே எலும்புகளை வலுபடுத்தும். இப்ப விட்டமின் கே வந்து எலும்பு கூட்டினுடைய கால்சியம் ஒழுங்கு பாட்டிற்கு மிகவும் அவசியமானது.
இதை நீங்க எப்படி சாப்பிடலாம்னு பார்த்தீங்கன்னா வாரத்துல குறைந்தது மூன்று முதல் நான்கு முறை முருங்கை கீரை, சூப்பு அல்லது முருங்கை கீரை பொரியல் மாதிரி நீங்க செய்து சாப்பிடலாம். பசலை கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும் மாற்றி மாற்றி உணவுகள் வந்து நீங்க சேர்த்து கொள்ளலாம் அப்படின்றதையும் நீங்க தெரிந்து கொள்ளுங்க.
அப்ப தினமும் நீங்க வந்து, கிரீன் வெஜிடபிள்ஸ் என்று சொல்லக்கூடிய பச்சை இலை காய்கறிகள் எடுத்துக் கொள்ளணும். சுழற்ச்சி அடிப்படையில வாரத்துல ஒரு தடவை கீரைகளை மாத்தி மாத்தி சாப்பிடும்போது, எலும்புகள் உங்களுக்கு 50 60 வயதுகளுமே வலுவாகதான் இருக்கும்ன்றத தெரிந்து கொள்ளுங்க. நீங்க பாதாம் பருப்பு மற்றும் அத்திப்பழம் எல்லாம் எடுத்துக்கொள்ளலாம்.
அதாவது விதைகள் மற்றும் நட்ஸ் எல்லாம் தினமும் ஒரு கைப்பிடி அளவு உளர் பழங்கள், டிரை ஃபுரூட்ஸ் எல்லாம் நீங்க வந்து எடுத்துக்கொள்ளலாம். இதெல்லாம் ஏன் அவசியம்னு கேட்டீங்கன்னா இந்த விதைகள் மற்றும் நட்ஸ் அப்புறம் உளர் பழங்கள் எல்லாமே மூட்டு பகுதிகளுக்கும் தசைகளுக்கும் 50 60 வயதுகள்ல தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி உங்களை வழுப்படுத்தும்.
இப்ப இதுல இருக்கக்கூடிய சத்துக்கள் பாத்தீங்கன்னா நீங்க பாதாம் பருப்புல விட்டமின் இ மற்றும் கால்சியம் இருக்கு. அத்தி பழங்கள்ல எலும்பு அற்றத்தை மேம்படுத்தக்கூடிய கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவுல இருக்குங்க. சோ நீங்க விதைகள் மற்றும் நட்ஸ் தினமும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொள்ளணும். உளர் பழங்களையுமே அது கூட நீங்க சேர்த்து எடுத்து கொள்ளலாம்.
எப்படி சாப்பிடலாம்ன்னு பாத்தீங்கன்னா, தினமும் நான்கு முதல் ஐந்து பாதாம் பருப்புகளை, இரவு தூங்குறதுக்கு முன்னாடி, சாதாரணமா குடிக்கக்கூடிய தண்ணீர்ல ஊற வச்சிட்டு, மறுநாள் காலையில எழுந்ததுக்கு அப்புறம், வெறும் வயிற்றில அதோடைய தோலை நீக்கிட்டு நீங்க வந்து எடுத்துக்கொள்ளலாம். இரண்டு உளர் அத்திப்பழங்களை, இரவுல தண்ணீர்ல ஊற வச்சிட்டு, மறுநாள் காலையில அந்த தண்ணீரோட சேர்த்து கூட, நீங்க அந்த அத்திப்பழத்தை எடுத்துக் கொள்ளும் போது, உங்களுடைய எலும்புகள் வந்து வலுவாகதான் இருக்கும்.
சோ, இந்த உணவுகளோட சேர்த்து நீங்க வந்து மத்தி, மீன் மற்றும் கடல் உணவுகள் உங்களுக்கு விருப்பப்பட்டீங்க அப்படின்னா வாரத்துல இரண்டு நாட்கள் உங்களுடைய உணவுகள் எடுத்துக்கலாம். சோயா பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் கூட நீங்க எடுத்து கொள்ளும் போது கூட உங்களுடைய உடல் எலும்புகள் வந்து வலுவாக இருக்கும்ன்றத தெரிந்து கொள்ளுங்க.
நாம 60 வயதுல எலும்புகளை பலம் பெற வைத்து கொள்ளணும்னு ஆரோக்கியமான உணவுகள் நிறைய எடுத்துக்கறோம். ஆனா ஒரு சில தவிர்க்க வேண்டிய உணவுகளைமே நம்ம சாப்பிடுறோம் அப்படின்றதுதான் உண்மை. அப்ப நாம என்ன பண்ணனும்னா அந்த தவிர்க்க வேண்டிய உணவுகளை தெரிந்து கொண்டு இனிமே அந்த உணவுகளை சாப்பிட கூடாது அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க.
அதுல பாத்தீங்கன்னா அதிகப்படியான உப்பு மற்றும் சோடியம் நிறைந்திருக்கக்கூடிய உணவுகள். இது எப்போதுமே உங்களுடைய எலும்பை பாதிக்கும். அதனால நீங்க இதை வந்து எடுத்துக்கொள்ளாமல் இருக்கறதுதான் நல்லது. இதை நீங்க ஏன் தவிர்க்கணும்னு பாத்தீங்கன்னா உப்புல இருக்கக்கூடிய சோடியம் மற்றும் கால்சியம் இரண்டுமே சிறுநிருகத்தின் மூலமாக வெளியேறும் போது ஒரே பாதையை பகிர்ந்து கொள்ளும்.
அதனால உங்களுடைய உணவில் இருக்கக்கூடிய உப்பினுடைய அளவு அதிகரிக்கும் போது அது சிறுநகத்தின் மூலமாக அதிகப்படியான கால்சியம் வெளியேறுவதற்கு வழிவகுக்கும். சோ இதனால உங்களுடைய எலும்புகளினுடைய வலிமைக்கு கால்சியம் தேவை தேவைப்படாம போயிடும். அப்ப எலும்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு அதிகமாயிடும். உடல்ல இருக்கக்கூடிய கால்சியம் வந்து சிறுநர் வழியாக திறந்து வெளியேறுது அப்படின்னா ரத்தத்துல இருக்கக்கூடிய கால்சியம் தேவையை வந்து அது பூர்த்தி செய்ய உடல் எலும்புகள்ல சேமித்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய கால்சியத்தை உரிஞ்சு தொடங்கும்.

இதனால காலப்போக்குல எலும்புகள் வந்து உங்களுக்கு பலவீனமாகி ஆஸ்டியோபோரோசிஸ் என்று சொல்லக்கூடிய எலும்பு மெலிவு நோயை உங்களுக்கு ஏற்படுத்தும். இப்ப இது எந்த உணவுகள்ல அதிகம் அப்படின்னு பாத்தீங்கன்னா ஊறுகாய்கள், கருவாடு, அப்பளம், பாக்கெட்டுகள்ல விற்கப்படக்கூடிய சிப்ஸ் வகைகள், பாலாடை கட்டிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாப்பாட்டு பொருட்கள் இது எல்லாமே நீங்க 50 60 வயதுல எடுத்து கொள்ளாமல் இருக்கிறதுதான் நல்லது.
60 வயதில சமையலிலுமே நீங்க உப்பினுடைய அளவை வெகுவாக குறைக்கிறது உங்களுடைய எலும்புகளை பாதுகாக்கும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. அப்புறம் அதிகப்படியான கேபயின் கொண்ட காபி மற்றும் தேநீர் இதெல்லாம் நீங்க வந்து எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. ஏன் தவிர்க்கணும்னு கேட்டீங்கன்னா காபி மற்றும் தேநீர்ல இருக்கக்கூடிய கேபயின் மற்றும் டேனின்கள் செரிமான மண்டலத்தில் கால்சியம் உரிஞ்சப்படக்கூடிய திறனை வந்து குறைச்சிரும்.
இதனால எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஒரு நாளைக்கு நீங்க இரண்டிலிருந்து மூன்று முறை டீ காபி எடுத்துக்கலாம். அதாவது டீ மூன்று டைம் எடுத்துக்கலாம். இல்லன்னா அல்லது நீங்க காபி எடுத்துக்கலாம். ரெண்டுமே சேர்த்து எடுத்துக்கொள்ளணும் அப்படின்றது அர்த்தம் கிடையாது அது வந்து. சோ இந்த மாதிரி நீங்க அளவாக எடுத்து கொள்ளும் போதுதான் அது உங்களுக்கு நல்லது.
அளவுக்கு அதிகமாக எடுத்துக்கிட்டீங்கன்னா அந்த காபி அல்லது டீ குடிக்கக்கூடிய பழக்கம் உங்களுக்கு இருக்குன்னா எலும்புகள் இருக்கக்கூடிய கால்சியம் சத்து படிப்படியாக குறையறதுக்கு வாய்ப்பு இருக்கு. குறிப்பாக 60 வயதுக்கு அப்புறம் எலும்புகள் வந்து இயற்கையாகவே மெலிந்து போகக்கூடிய நிலையில கேபயின் வந்து அந்த சீரழிவை உங்களுக்கு இன்னும் பாஸ்ட் பண்ணிடும்.
இதுக்கான மாற்று வழி என்னன்னா காபி டீ குடிப்பதனுடைய அளவை சரியாக ஒன்று அல்லது இரண்டு கோப்பைகளுக்கு அப்புறம் நீங்க வந்து குறைச்சு கொள்ளலாம். சோ அந்த அளவுக்கு எடுத்துட்டாலே போதுமானதுதான். அதற்கு பதிலாக நீங்க மூலிகை தேநீர் மோர் அல்லது சுடுதண்ணீர் குடிக்கிறது எல்லாமே 50 60 வயதில உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும். எலும்புகளுக்குமே ரொம்ப நல்லதுன்றத தெரிந்து கொள்ளுங்க.
நீங்க கார்பனேட்டர் பற்ற குளிர் பானங்கள் மற்றும் சோடாக்கள் இதெல்லாம் நீங்க எடுத்துக்கொள்ளக்கூடாது. கார்பனேட்டட் பற்ற அந்த கார்பனேட்டட் சாப்ட் ட்ரிங்க்ஸ் சோடா இதெல்லாம் எடுத்து கொள்ளக்கூடாது 50 60 வயதுகள்ல இதை நீங்க ஏன் தவிர்க்கணும்னு பார்த்தீங்கன்னா குளிர் பானங்கள்ல அதிக அளவுல பாஸ்போரிக் அமிலம் பாஸ்போனிக் ஆசிட்ஸ் மற்றும் சர்க்கரை வந்து சேர்க்கப்பட்டிருக்கும்.
இதெல்லா உங்களுக்கு எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படும். அப்ப ரத்தத்துல பாஸ்பரஸ்னுடைய அளவு அதிகமாகும் போது என்ன ஆகுதுன்னா உடல் வந்து சமநிலையை பாதுகாக்குறதுக்கு எலும்புகள் இருக்கக்கூடிய கால்சியத்தை காயத்து வெளியேற்றிடும். இதனால இந்த வகையான பானங்கள்ல உங்களுடைய உடல்ல கால்சியம் உரிஞ்சுப்படுவது முற்றிலுமாக தவிர்த்து எலும்புகளை உங்களுக்கு பலவீனமாக்கிடும்.
60 வயதில இருக்கக்கூடிய நபர்கள் எல்லாம் குளிர் பானங்களை தொடுவது முற்றிலுமாகவே தவிர்க்கிறது நல்லது. 50 60 வயதுகள்ல நீங்க கார்பனேற்றப்பட்ட குளிர் பானங்கள் சர்க்கரை அதிகமாக இருக்கக்கூடிய குளிர்பானங்கள் எல்லாம் எடுத்து கொள்ளவே கூடாது. அதிகப்படியான சர்க்கரை மற்றும் வெள்ளை சர்க்கரை பொருட்கள் நீங்க எடுத்து கொள்ள கூடாதுங்க.
50 60 வயதுல இந்த ரிபைன்டு சுகர் ஸ்வீட்ஸ் எல்லாம் நீங்க எடுத்துக் கொள்ளாமல் இருக்கறதுதான் நல்லது. ஏன் தவிர்க்கிறோம்னா வெள்ளை சர்க்கரை மற்றும் மைதாவால செய்யப்பட்டிருக்கக்கூடிய தின்பண்டங்கள் எல்லாமே உங்களுடைய உடல்ல தீவிரமான வீக்கத்தை இன்பிளமேஷன்ஸ்ல ஏற்படுத்துறதோடு ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். இதனால எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
அதிகப்படியான சர்க்கரையை நீங்க எடுத்துக்கறீங்க. உங்களுடைய இரத்தத்துல இன்சுலினுடைய அளவு அதனால அதிகரிக்கும். சோ சிறுநகங்கள் வழியாக கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் சிறுநீர் வெளியேறுவதை ஊக்குவிக்கும். இதனால எலும்புல புதிய செல்கள் உருவாகக்கூடிய அந்த இயற்கையான செயல்முறை வந்து உங்களுக்கு தடுத்து நிறுத்தப்பட்டிரும்.
அப்போ நீங்க இதுக்கு பதிலா மாற்று வலி என்ன பண்ணலாம்னா, சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லம், நாட்டு சர்க்கரை அல்லது தேன் போன்றவற்றை அதையுமே நீங்க மிதமான அளவுலதான் 50 60 வயதில பயன்படுத்தணும். இது வந்து வெள்ளை சர்க்கரை கம்பேர் பண்ணும்போது உங்களுக்கு நிறைய தீமைகளை எல்லாம் ஏற்படுத்தாது. நீங்க அளவா பயன்படுத்துனீங்கன்னா, இது நன்மைகளை மட்டும் மட்டுமே கொடுக்குமே தவிர தீமைகளை கொடுக்காது.
சோ, இதை நீங்க பயன்படுத்தலாம். பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் ப்ராசஸ்டு அண்ட் பாஸ்ட் ஃபுட்ஸ் எல்லாம் நீங்க வந்து 50 60 வயதுல தவிர்க்கணும். அப்பதான் உங்களுடைய எலும்புகள் பலமாக இருக்கும். இல்லன்னா எலும்புகள் பலவீனம் அடைந்துவிடும். இந்த உணவுகள் எல்லாம் நீங்க ஏன் தவிர்க்கணும்னா இந்த பர்கர் பீட்சா நூடுல்ஸ் மற்றும் துரித உணவுகள்ல செயற்கை சுவையூட்டிகள் இருக்கு கெமிக்கல்ஸ் இருக்கு அதிகப்படியான சோடியம் இருக்கு.
இதனால எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த உணவுகள்ல எலும்புகளுக்கு தேவையான ஒரு சத்துக்கள் கூட உங்களுக்கு இருக்காது. ஒரு சதவீதம் கூட நன்மைகளே தராது இந்த உணவுகள் எல்லாம். மாறாக இது உங்களுக்கு எலும்புகளுக்கு பிரச்சனை ஏற்படுத்தும். எலும்புகளினுடைய அற்றத்தையை குறைத்து மூட்டுகள்ல தேவையற்ற நச்சுக்களை சேர்ப்பதன் மூலமாக முழங்கால் வலியை அதிகரிக்க செய்யும்.
60 வயதில செரிமான மண்டலம் பலவீனமாக அமைஞ்சிரும். சோ இது போன்ற உணவுகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக உங்களுடைய உடல் நலத்தை வந்து கெடுக்கு உணத்தை தெரிந்து கொள்ளுங்க. அதனால அந்த பழக்கத்துக்கு நீங்க போகாதீங்க. அதிகப்படியாக மது அருந்தக்கூடிய பழக்கம் உங்களுக்கு இருக்கக்கூடாது. அதுக்காக குறைந்த மது அருந்தலாமான்னு கேட்கக்கூடாதுங்க.
இப்ப மது அருந்தக்கூடிய பழக்கமே உங்களுக்கு கெடுதல்தான் அப்படின்றத தெரிஞ்சுக்கோங்க. மது அருந்துவது கல்லீரல் மற்றும் இறைப்பையினுடைய செயல்பாட்டை பாதிக்கிறதோடு விட்டமின் டி மற்றும் கால்சியம் உடலில் உரிஞ்சப்படுவதையும் தீவிரமாக தடுத்துருது. இதனால எலும்புகளுக்குதான் பாதிப்பு ஏற்படும். அப்ப நீங்க மது குடிக்கும் போது எலும்புகளை உருவாக்கக்கூடிய செல்களை அது அழிச்சிரும்.
சோ எலும்புகளை தேய்மானம் செய்யக்கூடிய அந்த செல்களினுடைய செயல்பாட்டை அதிகரிச்சிரும். இதனால 50 60 வயதுகள்ல நீங்க தொடும்போது ரொம்ப உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்து பல மடங்கு அதிகரிச்சிரும். அதனால நீங்க ஆல்கஹாலையும் எடுத்துக்கொள்ள கூடாது. அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளல் இருந்தும் நீங்க கொஞ்சம் விலங்கி இருக்கிறது நல்லதுன்றத தெரிந்து கொள்ளுங்க.
சோ முன்னாடி சொல்லி இருக்கக்கூடிய ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொண்டு எலும்புகளை வலுபடுத்தி கொள்ளுங்க. அடுத்து சொல்லி இருக்கக்கூடிய இந்த உணவுகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எல்லாம் கொஞ்சம் தவிர்த்து விடுவது நல்லது. அப்பதான் உடல் எலும்புகள் வலுவாக இருக்கும். நீங்களும் நலமோடு வாழலாம். ஆரோக்கியமாக இருங்க. அடுத்த ஆரோக்கியமான பதிவில மறக்காமல் சந்திப்போம் நன்றி மக்களே.
