Category: Health

மருத்துவ குணங்கள் நிறைந்த நிலவேம்பு குடிநீரின் நன்மைகள்…!

காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது. நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளரும், நிலவேம்பு குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவருமான டாக்டர் சுபாஷ்சந்திரன் கூறியதாவது:- நிலவேம்பு என்பது வீடுகளில், காட்டுப்பகுதிகளில் வெள்ளைநிற […]

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பனங்கற்கண்டின் அற்புத பலன்கள்…!

ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை […]

சிறுநீரக கற்களை வெளியேற்றும் அற்புத இயற்கை மருந்து வாழைத்தண்டு…!

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. சிறுநீரக கற்களை […]

நோய்களுக்கு பயன்தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள்…!

சுளுக்கு வலி தீர: புளிய இலையை நன்கு சுடுநீரில் இட்டு, அவித்து அதைச் சூட்டோடு சூட்டாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் தந்தால் சுளுக்கு வலி குணமாகும். கண் எரிச்சல் தீர: நந்தியா வட்டம் செடியில் பூத்த பூவைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் கண் எரிச்சல் தீரும். ரத்தக்கொதிப்பு குணமாக: நெருஞ்சியை நன்கு நீரில் கொதிக்கவிட்டு அந்தச்சாற்றை எடுத்து அருந்தி வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும். தொண்டைக் கட்டு நீங்க: சுக்கை எடுத்து வாயில் இட்டு, மெல்ல உமிழ்நீரில் ஊறவைத்து அந்நீரைக்குடித்து வந்தால் தொண்டைக்கட்டு […]

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை அழகாக்கும் டிப்ஸ்…!

முகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும். தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும். முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசி பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து […]

அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடிய அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த வேம்பு…!

வேப்பம் பூ உடலில் உள்ள கொட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும். வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம். அஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கலால் அவதிபடுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். வாயில் ஏற்படக்கூடிய பற்சிதைவு, மூச்சு பிரச்னை, புண், ஈறுகளில் ரத்தம் […]

இயற்கையான முறையில் முக அழகைப் பராமரிக்க உதவும் தேங்காய் பால்…!

வெயில், மழை, தூசி, கெமிச்சல்ஸ், ஊட்டச்சத்தில்லா உணவுகள் என அத்தனையும் சேர்ந்து நம்முடைய சருமத்தை ஒருவழியாக்கிவிடுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களில் மூலம் இயற்கையாகவே நம்முடைய அழகைப் பராமரிக்க உதவும். வறண்ட சருமம் உடையவர்களுக்கு மிகச் சரியான தீர்வு தேங்காய்ப் பாலில் இருக்கிறது. தேங்காயில் வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளன. இது முகத்தை மென்மையாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. சிலருக்கு சிறு வயதிலேயே முகச் சுருக்கங்கள், கருவளையங்கள் என சருமத்தையே பாழாக்கிவிடும். அவர்கள் தங்களுடைய தோற்றத்திலிருந்து பத்து வயது குறைவாகத் தெரிய கூட வழிகள் இருக்கின்றன. […]

சமையலுக்கு பயன்படும் ஏலக்காய் எதற்கெல்லாம் மருந்தாகிறது தெரியுமா…!

ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது. இதில் புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன. ஏலக்காய் ஆண்மைக் குறைவை நீக்கி குழந்தைப் பாக்கியத்தை உண்டாக்க வல்லது. ஏலக்காயும், இலவங்கப் பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். […]

ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் ப்ராக்கோலி….!

ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன. ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது. அலர்ஜியால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும். நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக்கும். […]

நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…!

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது. பலவகையான மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த மூலிகை, இந்தியா முழுவதிலும் நீர் நிலைகள் அதாவது, ஆறு, கால்வாய், குளம், குட்டை, வயல் வரப்புகளில் வளரும் பூண்டு வகையைச் சார்ந்தது. அரைவட்ட வெட்டுப் பற்களுடன், நீண்ட காம்புகளை உடைய இதய வடிவ இலைகளைக் கொண்டது. இக்கீரைக்கு பிராமி என்றும் சரஸ்வதி என்றும் வேறு […]