Health Tips

The people have low-level vitamins. They wear glasses at their young ages.

விஜய் அஜித் போன் கூட பண்ணல … 45 லட்சம் கொடுத்து உதவிய சிரஞ்சீவி !

தமிழ் சினிமாவில் வில்லனாக மிரட்டி வந்தவர் பொன்னம்பலம். இவர் கமல் ரஜினி ,அஜித், விஜய் என எக்கச்சக்கமான முன்னணி ஹீரோக்களுடன் வில்லனாக நடித்திருக்கிறார்.

சிறுநீரக பிரச்சனை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு சிகிச்சைக்கு கூட பணம் இல்லை என வீடியோக்களும் வெளியிட்டு உதவி கேட்டிருந்தார். தற்பொழுது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறி உள்ள நடிகர் பொன்னம்பலம் தனக்கு உதவியாக இருந்தவர்கள் எல்லாம் நன்றி கூறியுள்ளார்.

சமீபத்தில் பேட்டியளித்த பொன்னம்பலம் தெலுங்கு நடிகர் சிரஞ்சீயிடம்  உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று கூறினாராம். அந்த மெசேஜை பார்த்த சிரஞ்சீவி பத்தே நிமிடத்தில் போன் போட்டு பேசினாராம். என்ன பொன்னம்பலம் எப்படி இருக்க அதற்கு பொன்னம்பலம் சிறுநீரக பிரச்சினை சார் என்று கூறியுள்ளார்.

உடனே சிரஞ்சீவி, நீ சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு என்று கூறியுள்ளார். பொன்னம்பலமோ  தனக்கு உதவி செய்யப் போகிறார் என்றுதான் அங்கு சென்றிருக்கிறார்.  கிட்டத்தட்ட 45 லட்சம் செலவு பண்ணி இருக்கிறார் சிரஞ்சீவி ஏதோ ஒரு லட்சம் செலவு பண்ணுவார் என நினைத்து போன பொன்னம்பலத்திற்கு சிரஞ்சீவி இவ்வளவு பெரிய உதவி செய்தது நெகிழ்ச்சியாக இருந்ததாம்.

அதேபோல் தனுஷ் இடமும் இவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இவருக்கு பணம் அனுப்பி உள்ளார் தனுஷ். அதே போல் அர்ஜுன் சரத்குமார் என பல நடிகர்களும் இவருக்கு உதவி செய்துள்ளார்கள். இதில் சரத்குமாருடன் படம் நடிக்கும் பொழுது சின்னசின்ன பிரச்சினைகளும் இருவருக்குள் எழுந்துள்ளது. இதனால் அவரிடமும் உதவி கேட்கலாமா வேண்டாமா என்று தயக்கத்துடன் இருந்துள்ளார். பின்னர் இவர் கேட்க சரத்குமார் உதவி செய்துள்ளார்.


மேலும் சரத் குமார் பொன்னம்பலத்தின் இந்த பிரச்சினையை பல நடிகர்களுக்கும் கூதி உதவி செய்ய வைத்துள்ளார். அதேபோல் விஜய், விக்ரம் ,அஜீத் இந்த மூன்று நடிகர்களும் ஒரு போன் கூட பண்ணி விசாரிக்கவில்லை என்று வருத்தப்பட்டு கூறியிருக்கிறார் பொன்னம்பலம்

admin

Back to top