காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது. நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். நெல்லை…