தமிழ் சினிமாவின் வரலாற்றை திருப்பி பார்த்தால் அதில் முத்திரை பதித்த நடிகைகள் பலர். அதில் முக்கியமான ஒருத்தர் ஸ்ரீதேவி இவர் தன்னுடைய நான்காவது வயதில் துணைவன் என்ற தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
இத்திரைப்படத்தில் அவர் முருகன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 1976 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. அதற்கடுத்ததாக பாரதி ராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் மயில் கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பினார்.
அதனைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டில் பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசனுடன் மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்தவர் ரஜினிகாந்த் கமல் என இருவரும் நட்சத்திரங்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.
இது மட்டுமில்லாமல் பாலிவுட் திரைப்படங்களிலும் கவனம் செலுத்திய ஸ்ரீதேவியின் பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக மாறினார்.
மேலும் ஸ்ரீதேவி தனது திரை உலக வாழ்க்கையில் ஐந்து பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். 1990களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தை இழந்தார் ஸ்ரீதேவி. அப்பொழுது எந்த நடிகையும் அந்த அளவிற்கு சம்பளம் வாங்கவில்லை.
இவர் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்த பொழுது குளியல் அறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். தனது அசாத்தியமான நடிப்பாலும், தான் நடித்த கதாபாத்திரமாகவே வாழ்ந்த ஸ்ரீதேவியை திரை உலகினரும் திரை ரசிகர்களும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.