தற்பொழுது சன் டிவியில் நம்பர் 1 இடத்தில் ஓடிக்கொண்டிருப்பது எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியில் மெகா ஹிட் அடித்த பல சீரியல்களை இயக்கிய திருச்செல்வம் இந்த சீரியலை இயக்குகிறார். இந்த சீரியல் தற்பொழுது அனைத்து சீரியல்களையும் துவம்சம் செய்து நம்பர் ஒன் இடத்தில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலின் ஆணிவேர் என்றால் இதில் நடிக்கும் குணசேகரன் கேரக்டர்தான். குணசேகரன் ஆக மாரிமுத்து அவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். என்னதான் இந்த சீரியலில் இவர் வில்லத்தனம் காண்பித்தாலும் திரைக்கு வெளியில் இவர் ஒரு மிகவும் நல்ல மனிதராக இருக்கிறார். இந்தப் பதிவில் நாம் இவருடைய குடும்ப புகைப்படங்களை பற்றியும் பார்ப்போம்.
ஆரம்பகால வாழ்க்கை
1990ஆம் ஆண்டு மாரிமுத்து தேனியில் உள்ள பசுமலை தெரு கிராமத்தில் உள்ள தனது வீட்டை விட்டு ஓடி திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்திருக்கிறார் ஆரம்ப கட்டத்தில் பசி தூக்கம் இன்மை என கஷ்டப்பட்டு ஹோட்டல்களில் பணியாளராக பணி பணியாளராக பணிபுரிந்திருக்கிறார்.
இவருக்கு தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் அதிகம் இதனால் இவருடைய சினிமா ஆரம்ப காலகட்டத்தில் திரையுலகில் பாடலாசிரியர் வைரமுத்துவுடன் நல்ல நட்பாக பழகி வந்துள்ளார். அதற்கு முன்பு ராஜ்கிரன் உடன் அரண்மனைக்கிளி ,எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
இவர் மேலும் மணிரத்தினம் ,வசந்த், சீமான் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பெரும் இயக்குனர்களுடனும் திரைப்பட உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். பிரசன்னா மற்றும் உதயதாரா நடித்த காதல் திரைப்படமான கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் இவர் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.
இந்த படம் பாக்ஸ் ஆபீசில் சிறப்பாக செயல்படவில்லை. இருந்தபோதிலும் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கத்துடன் அறிமுகமாகி இயக்குனராக காலடி எடுத்து வைத்துள்ளார்.
2010 களில் இருந்து அவர் முழுநேர நடிகராக மாறி விட்டார். பல தமிழ் திரைப்படங்களிலும் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். மிஸ்கினின் யுத்தம் செய் படத்தில் ஒரு நடிகராக அறிமுகமாகி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.
ஆரோகணம், நிமிர்ந்து நில் மற்றும் கொம்பன் உள்ளிட்ட படங்களிலும் இவருடைய நடிப்பு யதார்த்தமாக இருக்கும் மருது வில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. கடைசியாக வந்த கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தில் இவன் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார்.
சமீபத்தில் கூட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அளித்த பேட்டி ஒன்றில் அவர் எதிர்நீச்சல் சீரியலை விரும்பி பார்ப்பதாக கூறியிருந்தார். அதுபோல தளபதி விஜயின் அம்மாவும் இந்த சீரியலை பார்ப்பதாக கூறியிருந்தார்.