அம்மாவுக்கு மன அழுத்தம் அதனால இந்த முடிவு,அப்பா கைது கண்கலங்கிய மகள் Singer Kalpana Daughter Emotional Speech!!
அம்மாவுக்கு மன அழுத்தம் அதனால இந்த முடிவு,அப்பா கைது கண்கலங்கிய மகள் Singer Kalpana Daughter Emotional Speech!!இந்த 5 வகை மீன் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராதாம்..!
தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், முக்கியமான ஒரு காரணம் கொழுப்புச்சத்து அதிகமாகவே இருப்பது.
மீன் ஆரோக்கியமான உணவாகக் கருதப்பட்டாலும், எல்லா மீன்களும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதில்லை. சில வகையான மீன்கள்தான் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. அந்த வகையில், மாரடைப்பை தடுக்கும் 5 முக்கிய மீன் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
1சூரை மீன்
சூரை மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்த நாளங்களில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
2கானாங்கெளுத்தி மீன்
சுவையாக இருக்கும் கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த மீன் உலகளவில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கும் திறன் கொண்டது.
3 இறையன் மீன்
இறையன் மீனான டிரவுட் மீன், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதய ஆரோக்கியத்தைக் காக்க, இந்த மீனை உணவில் அடிக்கடி சேர்த்துகொள்ளலாம்.
4வெங்கணை மீன்
வெங்கணை மீனில் E.P.A மற்றும் D.H.A எனும் இரண்டு முக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இதில் வைட்டமின் டியும் அதிகமாக உள்ளது.
5 மத்தி மீன்
மத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, செலினியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த இது உதவுகிறது.
இந்த 5 மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். இதய ஆரோக்கியத்தைக் காக்க, இனி உணவுப் பழக்கத்தில் இவற்றை இணைத்துக் கொள்ளுங்கள்!