Health Tips

The people have low-level vitamins. They wear glasses at their young ages.

சருமக் குழிகளை சரிசெய்து மென்மையாக வைத்திருக்க உதவும் சோற்றுக் கற்றாழை…!

Aloe Vera Uses and Benefits

முகப்பருவினால் சில பெண்களுக்கு முகத்தில் சருமக் குழிகள் வந்துவிடுகின்றது. இதனை போக்குவதற்காக கண்ட கெமிக்கல்கள் கொண்ட கிரீம்கள் போடுவதை நிறுத்தி விட்டு, இயற்கையாக வீட்டில் உள்ள சில பொருள்களைப் பயன்படுத்தினாலே போதும். சருமக்குழிகளை சரி செய்துவிட முடியும்.

அந்த வகையில் சோற்றுக் கற்றாழைக்கு கிருமிகளை அழிக்கின்ற தன்மையும் சருமத்துக்குத் தேவையான உயிர்ச் சத்துக்களும் அதில் நிறைய உண்டு. கற்றாழையில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும்.

கற்றாழையில் உள்ள என்சைம் நம்முடைய சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். சருமத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.

சோற்றுக்கற்றாழை முகத்தில் தோன்றும் சருமத் திட்டுக்கள், வெண் புள்ளிகள் ஆகியவற்றை நீக்கும். சருமம் வறட்சி அடையாமல் இருக்கும். சில சமயம் பருக்களால் உண்டாகும் சரும வீக்கத்தையும் சரிசெய்யும். அந்த கற்றாழையைக் கொண்டு, எவ்வாறு சருமத் துளைகள் மற்றும் திட்டுக்களைப் போக்க முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.

சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை

பயன்படுத்தும் முறை: கற்றழை ஜெல், மஞ்சள் தூள். முதலில் சோற்றுக் கற்றாழையின் மேல் பகுதியில் இருக்கின்ற தோலை நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் ஜெல்லை தண்ணீரில் நன்றாக இரண்டு மூன்று முறை சுத்தம் செய்தால் வேண்டும். பின் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு பருக்கள் மற்றும் சரு கருந்திட்டுக்கள் உள்ள இடத்தில் இந்த ஜெல்லை தடவி, இருபது நிமிடங்கள் வரையில் அப்படியே வைத்திருந்து கழுவுதல் வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்திருக்கும். இதன் மூலம் உடல் உஷ்ணமும் குறையும். பருக்கள் வந்த இடத்தில் வடுக்கள் ஏதும் இல்லாமல் சுத்தமாக நீங்கி விடும்.

Disclaimer:

உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்காமல் உடல்நலப் பிரச்சனை, நோயைக் கண்டறிய அல்லது சிகிச்சையளிக்க இங்கே இடுகையிடப்பட்ட எந்த தகவலையும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது.
எந்த ஆலோசனைக்கும் முதலில் உங்கள் மருத்துவரை அணுகவும்.

இங்கு வெளியிடப்பட்டுள்ள அனைத்து மருத்துவ குறிப்புகளும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே என்பதை முதலில் கவனிக்கவும்.

admin

Back to top