Health Tips

The people have low-level vitamins. They wear glasses at their young ages.

சமையலுக்கு பயன்படும் ஏலக்காய் எதற்கெல்லாம் மருந்தாகிறது தெரியுமா…!

ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.
காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது. இதில் புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.

ஏலக்காய் ஆண்மைக் குறைவை நீக்கி குழந்தைப் பாக்கியத்தை உண்டாக்க வல்லது. ஏலக்காயும், இலவங்கப் பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

நெஞ்செரிச்சலும், வாய்வுத் தொந்தரவும் இருப்பவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும்.

ஏலக்காய்
ஏலக்காய்

அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5 அல்லது 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.

ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும். ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெர்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.

குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால், இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தயின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும் வாந்தி உடனே நின்று விடும்.

ஏலக்காய்களில் இருக்கும் பிசபோலீன் எனப்படும் வேதிப்பொருள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டவையாக இருப்பதாக மேலை நாடுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் கூறுகிறது

admin

Back to top