Health Tips

The people have low-level vitamins. They wear glasses at their young ages.

இயற்கையான முறையில் முக அழகைப் பராமரிக்க உதவும் தேங்காய் பால்…!

வெயில், மழை, தூசி, கெமிச்சல்ஸ், ஊட்டச்சத்தில்லா உணவுகள் என அத்தனையும் சேர்ந்து நம்முடைய சருமத்தை ஒருவழியாக்கிவிடுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களில் மூலம் இயற்கையாகவே நம்முடைய அழகைப் பராமரிக்க உதவும்.
வறண்ட சருமம் உடையவர்களுக்கு மிகச் சரியான தீர்வு தேங்காய்ப் பாலில் இருக்கிறது. தேங்காயில் வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளன. இது முகத்தை மென்மையாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

சிலருக்கு சிறு வயதிலேயே முகச் சுருக்கங்கள், கருவளையங்கள் என சருமத்தையே பாழாக்கிவிடும். அவர்கள் தங்களுடைய தோற்றத்திலிருந்து பத்து வயது குறைவாகத் தெரிய கூட வழிகள் இருக்கின்றன.

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அது மிக வலிமைமிக்க ஆண்டி- ஆக்சிடண்ட்டாக செயல்படும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் பால், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கள் வரை அதை முகத்தில் உலரவிட்டுப் பின், குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

தேங்காய் பால்
தேங்காய் பால்

தேங்காயைத் துருவி அரைத்து பாலெடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுறிதளவு அரிசி மாவை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின், வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவுங்கள். முகம் பளிச்சென்றிருக்கும்.

தேவையானவை : முல்தானிமட்டி – 1 டீஸ்பூன் தேங்காய் பால் – 1 டீஸ்பூன். செய்முறை : இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து முகத்துக்கு பேக் போல் போடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய வேண்டும். விரைவிலேயே அழகு பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.

பப்பாளி இயற்கை நமக்குக் கொடுத்த வரங்களுள் ஒன்று. அதில் முழுவதும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. கனிந்த பப்பாளியை கூழாக்கி, அதில் சில துளிகள் தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, அது நன்கு இறுகும் வரை வைத்திருந்து குளிர்ந்த நீரால் முகம் கழுவுங்கள்.

கரும்புள்ளி நீங்க : தேவையானவை : உருளைக்கிழங்கு ஜூஸ் – 1 டீஸ்பூன் தேங்காய் பால் – 1 டீஸ்பூன் பயிற்றம் மாவு – 1 டீஸ்பூன். செய்முறை: மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு ”பேக்” போடுங்கள். காய்ந்ததும் கழுவி விடுங்கள். வாரம் இருமுறை இதைச் செய்தால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.

admin

Back to top