இதுவரை நாம் பார்க்காத சச்சின் டெண்டுல்கரின் திருமண புகைப்படங்கள் !

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கருக்கு 49 வயதாகிறது. வெறும் 16 வயது 205 நாட்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த சச்சின், 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை ஆண்ட பிறகு, நவம்பர் 2013 இல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இவர் ரமேஷ் மற்றும் ரஜினி டெண்டுல்கருக்கு 1973 இல் மும்பை தாதரில் பிறந்தார். சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் ஒரு மராத்தி நாவலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவரது தாய் ரஜினி காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
ஆரம்ப காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் சகோதரர் அஜித் டெண்டுல்கர் தான் சச்சினுக்கு கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கிறார். பின்னர், சச்சின் டெண்டுல்கர், குரு ரமாகாந்த் அச்ரேக்கரிடம் தங்கி கிரிக்கெட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
சச்சின் மற்றும் வினோத் பார்ட்னெர்ஷிப்

1988ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி, நடைபெற்ற ஹாரிஸ் ஷீல்டின் அரையிறுதிப் போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்கு வினோத் காம்ப்ளியுடன் இணைந்து சச்சின் ஆட்டமிழக்காமல் 664 ரன்களை சேர்த்தார்.
அந்த பார்ட்னர்ஷிப்பின் போது சச்சின் 326 ரன்களுடனும், காம்ப்ளி 349 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த நிகழ்வு அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் மாற்றத்திற்கு காரணமாக இருந்தது.
அதன் பிறகு நவம்பர் 15, 1989 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்ட் போட்டியில் சச்சின் இந்திய அணிக்காக அறிமுகமானார். அந்த அறிமுகத்திற்குப் பிறகு சச்சின் இந்த கிரிக்கெட் உலகில் புதிய பாதையை உருவாக்க தொடங்கினார்.

மேலும் 1995ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கும் அஞ்சலிக்கும் திருமணம் நடைபெற்றது. அஞ்சலி டெண்டுல்கர் சச்சினை விட ஆறு வயது மூத்தவர், அவர் குழந்தைகள் நல மருத்துவர் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
உலகறியும் சச்சினின் பெருமை

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கரின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் இந்த மெழுகுச் சிலை அச்சு அசல் அவரைப் போலவே இருக்கிறது.

சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 24 செப்டம்பர் 1999 அன்று மும்பையில் பிறந்தார். அர்ஜுன் எதிரே இருக்கும் இடது கையால் பந்துவீசுகிறார். இவர் ஐபிஎல் 2022ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
சுவாரசிய நிகழ்வு
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்திய கிரிக்கெட்டின் தீவிர ரசிகர். சஞ்சய் தத் ஒரு பேட்டியில் தான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன் என்று கூறியிருக்கிறார். இந்தப் பேட்டியில் கபில் தேவ்வும் உடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். வீரேந்திர சேவாக் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு, கங்குலி ஓப்பனிங் செய்யாமல் மிடில் ஆர்டரில் விளையாடத் தொடங்கினார்.
‘லிட்டில் மாஸ்டர்’ சுனில் கவாஸ்கர் 125 டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்கள் அடித்துள்ளார். அவரது சாதனையை சச்சின் டெண்டுல்கர் 10 டிசம்பர் 2005 அன்று இலங்கைக்கு எதிராக 109 ரன்கள் எடுத்ததன் மூலம் முறியடித்தார்.